அரசியல்

"அதானியை போல மோடியும் செல்லா காசு போல வீழ்ச்சி அடைவார்" -திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தாக்கு !

அதானியின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தது போல் மோடியும் செல்லா காசு போன்று ஒருநாள் வீழ்ச்சி அடைவார் என திமுக மாணவர் அணித்தலைவர் ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.

"அதானியை போல மோடியும் செல்லா காசு போல வீழ்ச்சி அடைவார்" -திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை திருவல்லிக்கேணியில் "மோடி - அதானி கூட்டுக் கொள்ளை" முட்டுச்சந்தில் முதலாளித்துவம் பேசலாம் வாங்க என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக மாணவர் அணித்தலைவர் ராஜீவ் காந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக மாணவர் அணித்தலைவர் ராஜீவ் காந்தி "மோடி வளர்கிற போது அதானியும் வளர்கிறார். அதானியின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தது போல் மோடியும் செல்லா காசு போன்று ஒருநாள் வீழ்ச்சி அடைவார் என்று பேசிய அவர் இந்தியாவில் மாட்டுச்சாணத்தையும், கோமியத்தையும் புனிதமாக பேசுகிறார்கள். இவர்கள் தேசப்பக்தி என்ற பெயரில் ஒட்டுமொத்த நாட்டையே கொள்ளை அடித்து இருக்கிறார்கள்

"அதானியை போல மோடியும் செல்லா காசு போல வீழ்ச்சி அடைவார்" -திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தாக்கு !

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறார் கொரோனாவையும் எதிர் கொண்டு ஒன்றிய அரசு நிதி சரிவை சந்திக்கவில்லை என்கிறார். கொரோனாவை காரணம் காட்டி ஒன்றிய அரசு தப்பிக்கிறது. கொரோனாவின் போது அதானி பங்குகள் மட்டும் 6 சதவீதம் எப்படி உயர்ந்தது. மற்ற நிறுவனங்கள் எல்லாம் தளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட பணம் எல்லாம் அதானிக்கு சென்றது

டிஜிட்டல் இந்தியா என்ற முறையின் மூலம் அதானியை மோடி வளர்த்துள்ளார். அதானி பண சிக்கல் என்ற பெயரில் தேசப்பக்தி குறித்து பேசுகிறார். மோடி வளர்கிற ஒவ்வொரு படிக்கட்டும் அதானி வருகிறார். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது

"அதானியை போல மோடியும் செல்லா காசு போல வீழ்ச்சி அடைவார்" -திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தாக்கு !

ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் குரல் கொடுத்து வருகிறது.‌ இந்திய அரசியலமைப்பு சட்டம் தற்போது சாமானியர்களின் குரலாக இல்லை. இந்து வைதீக நாட்டை அமைக்க ஒன்றிய அரசு முயல்கிறது. அதானி பணம் கொடுக்கிறார். மோடி பேசுகிறார். நீதிபதிகளில் ஏன் இட ஒதுக்கீடு இல்லை. மக்கள் போராடும் போது பா.ஜ.க. எடுத்த ஆயுதம் நீதிமன்றம். அதானி என்ற‌ ஒரு முகம் தான் நமக்கு தெரிந்துள்ளது. ராமர்‌ கோவிலை கட்டுகிறேன் என தெரிவித்து கோவிலை கட்டவில்லை. நாங்கள் அதானி என்கிற உங்கள் ராமனை சந்தேகப்படுகிறோம்

"அதானியை போல மோடியும் செல்லா காசு போல வீழ்ச்சி அடைவார்" -திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தாக்கு !

மோடி திட்டங்களை வெளியில் இருந்து இயக்குபவர் தான் அதானி மோடிக்கு வீடு இல்லை அதனால் அவர் பாராளுமன்றத்துக்கு அதிகம் வருவார், பாராளுமன்றத்திக்கு அதிகமாக வந்தவர் மோடி தான் அதை பற்றி பேச விரும்பவில்லை அதானி குறித்து குறைந்த பட்சம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்.அதானியின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தது போல் மோடியும் செல்லா காசு போன்று ஒருநாள் வீழ்ச்சி அடைவார், தேசப்பக்தி என்ற பெயரில் ஒட்டுமொத்த நாட்டையே கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் " என்று விமர்சித்தார்.

banner

Related Stories

Related Stories