அரசியல்

"சீமானும் பாஜகவும் ஒன்றுதான்.. இதை தம்பிகள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்" -எழுத்தாளர் மருதையன் விளக்கம்!

எழுத்தாளர் மருதையன் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் சீமானின் பித்தலாட்டங்கள் குறித்தும், சுற்றுசூழல், மணல் கொள்ளை குறித்த சீமான் மற்றும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் தோலுரித்துள்ளார்.

"சீமானும் பாஜகவும் ஒன்றுதான்.. இதை தம்பிகள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்" -எழுத்தாளர் மருதையன் விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், அவருக்கு மெரினா கடற்கரையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க வேண்டாம். அங்கு நினைவுச் சின்னம் வைத்தால் ஒரு நாள் வந்து நான் உடைப்பேன்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து சீமானின் இந்த பேச்சுக்கு தி.மு.க தொண்டர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

"சீமானும் பாஜகவும் ஒன்றுதான்.. இதை தம்பிகள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்" -எழுத்தாளர் மருதையன் விளக்கம்!

மேலும், அமைச்சர் சேகர் பாபு போன்ற அமைச்சர்களும் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கருத்து தெரிவித்தனர். இதனிடையே எழுத்தாளர் மருதையன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்” என்று நான் சொல்லவே இல்லை”என்று நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவின் முன் சீமான் பயந்து மண்டியிட்டது உண்மையா, இல்லையா? அண்ணன் பென்சிலைக்கூட உடைக்க மாட்டாரு, அவுரு பேசுறதயெல்லாம் சீரியசா எடுத்துகிட்டு…” எனத் தெரிவித்தார்.

எழுத்தாளர் மருதையனின் இந்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வழக்கம்போல ஒருமையில் பேசி வந்தனர். அதிலும் சீமானின் வழக்கறிஞர் மருதன் என்பவர், “சீமான் அருணா ஜெகதீசன் ஆணையத்திடம் சாட்சி அளிக்கும் போது வழக்கறிஞர் என்ற வகையில் தான் உடன் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், சீமான் அவர்கள் “நான் மக்களை போராட்டாத்திற்கு அழைத்தேன்! போராடக் கேட்டுக் கொண்டேன்! கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினேன்!” என்றுதான் ஆணையத்திடம் கூறினார். என்றும் கூறினார்.

ஆனால், அதன்பின்னர் சீமான் அருணா ஜெகதீசன் ஆணையத்தில் கூறியதை பதிவிட்ட எழுத்தாளர் மருதையன் "சீமான் சாட்சியம் அளிக்கையில் வழக்கறிஞரான நான் உடனிருந்தேன். "மக்களை போராட்டத்துக்கு அழைத்தேன்" என்றுதான் அவர் சாட்சியம் அளித்தார்" என அவரது வழக்கறிஞர் கூறுகிறார்அப்போ, நீதிபதி பொய் சொல்கிறாரா? சவடாலும் வசவும் மட்டுமே அரசியல் அல்ல. கொஞ்சம் உண்மையும் வேணும் தம்பிகளே!" என சூடாக பதிலடி கொடுத்தார்.

இதனால் ஆடிப்போன தம்பிகள் அதன்பின்னர் எழுத்தாளர் மருதையனின் கடத்த கால வாழ்க்கை குறித்து கதை அளக்க தொடங்கினர். இந்த நிலையில், எழுத்தாளர் மருதையன் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் சீமானின் பித்தலாட்டங்கள் குறித்தும், சுற்றுசூழல், மணல் கொள்ளை குறித்த சீமான் மற்றும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் தோலுரித்துள்ளார்.

தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில்"சுற்றுசூழல், மணல் கொள்ளை குறித்து பேசிவிட்டு பின்னர் தனது திருமணத்துக்கு பின்னர் சீமான் மணல் கொள்ளையில் பெயர்பெற்ற தொழிலதிபரின் காலில் விழுந்துதான் ஆசி வழங்கினார். தென்மாவட்டங்களில் நாடாகும் மணல் கொள்ளைகளை எதிர்த்து ஒருமுறை கூட சீமான் பேசவில்லை. அரசு அந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுத்தபோது அனுமதி கொடுத்துவிட்டு இப்போது இப்படி செய்வது தவறு என்றும் மணல் கொள்ளை உரிமையாளருக்கு ஆதரவாக பேசினார்." என சீமானின் உண்மை முகம் குறித்து விளக்கியுள்ளார்.

அதோடு "மணல் கொள்ளையில் பெயர்பெற்ற அந்த தொழிலதிபர் குறித்து பேசினால் தமிழக முதலாளி வளர்வது பலருக்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறார். அப்படி என்றால் அங்கு அந்த மணல் கொள்ளையை கண்டித்து போராடிய மக்கள் தமிழர்கள் இல்லையா ? கிரனைட் தொழில் காரணமாக விவசாயமே அழிந்துவிட்டது. அது எல்லாம் சீமானுக்கு தெரியாதா ? " என எழுத்தாளர் மருதையன் விமர்சித்துள்ளார்.

"சீமானும் பாஜகவும் ஒன்றுதான்.. இதை தம்பிகள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்" -எழுத்தாளர் மருதையன் விளக்கம்!

மேலும், "சசிகலா கணவர் நடராஜன் தமிழர், அதனால் அவரை ஆதரிப்போம் என்கிறார். அப்படி என்றால் தவறு செய்தவர்கள் தமிழர் என்றால் கூட சீமான் ஆதரிப்பாரா? அதனால் தமிழர்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் தமிழர்கள் இல்லையா ? தமிழ்நாட்டை கொள்ளையடிக்கக்கூடிய தமிழர்களுக்குதான் சீமான் ஆதரவாக இருக்கிறார். கைதட்டக்கூடிய தம்பிகள், சீமான் எந்த தமிழருக்கு ஆதரிக்கிறார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்" எனக் கூறியுள்ளார்.'

தொடர்ந்து பேசிய அவர், "இந்துகளுக்கு நாங்கள் என்று சொல்லி பாஜக செய்வதை தான் தமிழர்களுக்கு நாங்கள் என்று சொல்லி சீமான் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் பாஜகவும், சீமானும் ஒன்றுதான் . கருத்தே இல்லாமல் சத்தம் போடும் அரசியலை தமிழ்நாட்டில் இருவர்தான் செய்கிறார்கள், ஒன்று பாஜக, மற்றொன்று சீமான்" என இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை குறித்தும் விளக்கியுள்ளார்.

"சீமானும் பாஜகவும் ஒன்றுதான்.. இதை தம்பிகள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்" -எழுத்தாளர் மருதையன் விளக்கம்!

அதன்பின்னர் கலைஞர் பேனா விவகாரம் குறித்து பேசிய அவர் "சீமான் கூறியது போல கலைஞர் பேனா சிலை வைக்கும் இடத்தில் பவளப்பாறை எல்லாம் இல்லை. மீனவர்கள் தரப்பில் இதற்கு வரவேற்பு தான். கலைஞர் பேனா சிலை வைக்கும் இடத்தில் பாலம் வைத்துதான் நடைபாதை அமைக்கப்படுகிறது. இதனால் பாலத்தின் கீழ் மீனவர்கள் செல்லலாம், மேலும், அந்த பகுதியில் பாலத்தில் பாசி படிவதால் மீன் வளம் அதிகரிக்கவே செய்யும். இதை மீனவர்கள் பாராட்டவே செய்வார்கள்.

தொழிற்சாலைகள் அமைக்க சுற்றுசூழல் குறித்த கருத்து கேட்கப்படவேண்டும். ஆனால், அதற்கான விதியையே மோடி நீக்கிவிட்டார். இதில் இவர்கள் சுற்றுசூழல் குறித்து பேசுகிறார்கள். மஹாராஷ்டிராவில் கடலில் இருக்கும் சிவாஜி சிலைக்கு 3500 கோடி செலவு, அந்த சிலைக்காகவே சட்டத்தில் விதிவிலக்கு அறிவித்தார்கள்.

"சீமானும் பாஜகவும் ஒன்றுதான்.. இதை தம்பிகள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்" -எழுத்தாளர் மருதையன் விளக்கம்!

கன்னியாகுமரியில் விவேகானத்தர் பாறையை மீனவர்களை விரட்டி விட்டே RSS அமைப்பினர் பிடித்துக்கொண்டனர். இதில் RSS காரர்களுக்கு அடி கொடுக்கும் விதமாக அதன் அருகே திருவள்ளுவர் சிலையை கலைஞர் நிறுவினார். தெற்கே திருவள்ளுவர் சிலையை போல வடக்கே RSS, இந்துத்துவ கருத்துக்கு பதில் கொடுக்கும் விதமாக கடலில் கலைஞரின் பேனா அமைவதில் எந்த தவறும் இல்லை" என எழுத்தாளர் மருதையன் கூறியுள்ளார்.

மேலும், "சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எத்தனையோ இடம் இருக்கிறது. ஆனால், அங்கு எல்லாம் சீமானுக்கு கோவம் வராது. இன்னும் சொல்லவேண்டும் என்றால் சீமானுக்கு எங்கே உண்மையில் கோவம் வரவேண்டுமோ அங்கே கோவம் வராது. ஆனால் கலைஞர், திமுக என்றால் கோவம் வந்துவிடும்.

"சீமானும் பாஜகவும் ஒன்றுதான்.. இதை தம்பிகள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்" -எழுத்தாளர் மருதையன் விளக்கம்!

இந்தியாவில் குற்றவாளிக்கு எங்காவது நினைச்சின்னம் இருக்கிறதா ? ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு சின்னம் இருக்கிறது.. ஏன் சீமான் அதை சென்று உடைக்கவேண்டியதுதானே.

இது வணங்குவதற்காக உருவாக்கப்பட்ட பேனா அல்ல, வணங்குவதை எதிர்த்தவருக்காக உருவாக்கப்படும் பேனா. அதனால்தான் பலருக்கு கலைஞரின் பேனா கசக்கிறது. அந்த பேனா சின்னல் சனாதனத்துக்கு எதிரான ஒரு குறியீடு. கலைஞர் மீது விமர்சனத்தை தாண்டி சனாதனத்துக்கு எதிரானது அந்த பேனா. உண்மையில் தம்பிகள் உடைக்கவேண்டியது அந்த சனாதனத்தைதான்" என உண்மையை அனைவரும் அறியும் வகையில் எழுத்தாளர் மருதையன் பேசியுள்ளார். .

Related Stories

Related Stories