அரசியல்

தமிழ்நாடு என்ற சொல்லை மீண்டும் தவிர்த்த ஆளுநர் ரவி: சர்ச்சையை ஏற்படுத்திய பொங்கல் விழா அழைப்பிதழ்!

ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற சொல்லை மீண்டும் ஆளுநர் ரவி தவிர்த்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு என்ற சொல்லை மீண்டும் தவிர்த்த ஆளுநர் ரவி: சர்ச்சையை ஏற்படுத்திய பொங்கல் விழா அழைப்பிதழ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்த மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் வேண்டும் என்றே இழுத்தடித்து வருகிறார்.

தமிழ்நாடு என்ற சொல்லை மீண்டும் தவிர்த்த ஆளுநர் ரவி: சர்ச்சையை ஏற்படுத்திய பொங்கல் விழா அழைப்பிதழ்!

அதுமட்டுமல்லாது, ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் தனது சனாதன கருத்துக்களைப் பேசி வருகிறார். அண்மையில் கூட தமிழ்நாட்டைத் தமிழகம் என்று அழைப்பதுதான் சரியானது என பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.

இதோடு நின்று விடாத ஆளுநர் நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இருந்த சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லூயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற வார்த்தைகளை வேண்டும் என்றே தவிர்த்து வாதித்தார்.

தமிழ்நாடு என்ற சொல்லை மீண்டும் தவிர்த்த ஆளுநர் ரவி: சர்ச்சையை ஏற்படுத்திய பொங்கல் விழா அழைப்பிதழ்!

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. மேலும் ட்விட்டரில் #GetOutRavi, என்ற ஹேஷ்டாக் இப்போதும் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் ஆளுநருக்கு எதிராக பொதுமக்களும் , கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற சொல்லை மீண்டும் வேண்டும் என்ற தவிர்த்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் விழாவில் பங்கேற்குமாறு ஆளுநர் மாளிகையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் தமிழ்நாடு அரசுக்கு பதில் தமிழக ஆளுநர் என்று இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசின் இலச்சினை நீக்கப்பட்டு அதற்குப் பதில் ஒன்றிய அரசின் இலச்சினை இடம் பெற்றுள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு சித்திரை விழாவுக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றும், தமிழ்நாடு அரசின் இலச்சினையுடம் இருந்தது. இப்போது அழைப்பிதழில் வேண்டும் என்றே தமிழ்நாடு என்ற வார்த்தையையும், இலச்சினையையும் ஆளுநர் நீக்கியுள்ளார். இதிலிருந்தே அவர் தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தெள்ளத்தெளிவாகியுள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு மக்களின் வரிப்பணத்தில் இருந்தும், வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவாரா ஆளுநர் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு என்ற சொல்லை மீண்டும் தவிர்த்த ஆளுநர் ரவி: சர்ச்சையை ஏற்படுத்திய பொங்கல் விழா அழைப்பிதழ்!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலச்சினை மட்டுமே இருக்கிறது.

நமது இலச்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா? ”என தெரிவித்துள்ளார்.

நேற்றுதான் சட்டப்பேரவையின் மரபையே மீறினால் என்றால் இன்று மீண்டும் அதேபோன்று நடந்து ஆளுநர் நடந்து கொண்டுள்ளது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories