அரசியல்

"ரம்மி ரவி,பிளேடு ரவி,கஞ்சா ரவி என்று அழைக்கக்கூடாதோ அதேபோல.."-ஆளுநருக்கு திமுக MP செந்தில்குமார் பதிலடி

ஆளுநரை ரம்மி ரவி என்று அழைக்கக்கூடாதோ அதேபோல அதே போல தான் நம் மாநிலத்தை தமிழ்நாடு என்று மட்டும் தான் குறிப்பிட வேண்டும் என்று திமுக எம்.பி செந்தில் குமார் கூறியுள்ளார்.

"ரம்மி ரவி,பிளேடு ரவி,கஞ்சா ரவி  என்று அழைக்கக்கூடாதோ அதேபோல.."-ஆளுநருக்கு திமுக MP செந்தில்குமார் பதிலடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை ஆளுநர் போன்ற நாட்டின் முக்கிய பொறுப்பில் அமர்த்தி வருகிறது. அவர்களும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்துக்கு உண்மையாக இருக்கலாம் மக்களை பிறப்பில் இருந்தே பிரித்து வைக்கும் சனாதனத்துக்கு உண்மையாக இருந்து அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான தொடர்ந்து பேசி வருவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் நிகழ்வு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசுகையில், தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் எனவும், 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

"ரம்மி ரவி,பிளேடு ரவி,கஞ்சா ரவி  என்று அழைக்கக்கூடாதோ அதேபோல.."-ஆளுநருக்கு திமுக MP செந்தில்குமார் பதிலடி

அவரின் இந்த கருத்து தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் என பலதரப்பில் இருந்து ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ட்விட்டரில் 'தமிழ்நாடு' என்ற ஹஸ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு ஆளுநரின் இந்த பேச்சை கண்டித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் குறிப்பாக "தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் செயல்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போய்ப் பேச வேண்டியதை, ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு அவர் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. இவருக்குத் தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக ஆகும் ஆசை இருந்தால், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வந்து, இது போன்ற அபத்தங்களைப் பேசட்டும்" என்று கூறியிருந்தார்.

மேலும், பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் ஆளுநரின் இந்த பேச்சை கண்டித்து வருகின்றனர். எழுத்தாளர் பா.ராகவன் கூட "எழுதும்போது தேவைப்படும் இடத்தில் தமிழகம், தமிழ்நாடு என்று அந்தந்தக் கணத்தில் எது தோன்றுகிறதோ அதைப் பயன்படுத்தி வந்தேன். அது தவறு என்று சுட்டிக்காட்டிய ஆளுநருக்கு நன்றி. இனி எங்கும் எதிலும் தமிழ்நாடு என்று மட்டுமே எழுதுவேன்" என ஆளுநரின் கருத்தை எதிர்த்து பதிவிட்டிருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி யுமான திருமாவளவன் "ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பதே சரியாக இருக்கும்" விமர்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக எம்.பி செந்தில் குமார் "ரவி அவர்களை கரவி கவரவி கவர் ரவி கவர்ன ரவி ரவுடி ரவி பட்டாகத்தி ரவி பிளேடு ரவி கஞ்சா ரவி பான்பராக் ரவி மாட்டு ரவி ரம்மி ரவி என்று எல்லாம் எப்படி அழைக்க கூடாதோ.. அதே போல தான் நம் மாநிலத்தை தமிழ்நாடு என்று மட்டும் தான் குறிப்பிட வேண்டும். Understand புரியுதா" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories