அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலில் NO சீட்.. அண்ணாமலையின் திட்டத்தால் கடுப்பில் பா.ஜ.க சீனியர்கள்: முற்றும் மோதல்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சீனியர்களுக்கு சீட் கொடுக்க முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி தமிழ்நாடு பா.ஜ.க கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் NO சீட்..  அண்ணாமலையின் திட்டத்தால் கடுப்பில் பா.ஜ.க சீனியர்கள்: முற்றும் மோதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவராக தற்போதைய ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு பிறகு அண்ணாமலையை டெல்லி தலைமையிடம் நியமித்தது. அப்போதே அண்ணாமலைக்கும் தமிழ்நாட்டு பா.ஜ.க கட்சியின் சீனியர் தலைவர்களுக்கும் இடையே மோதல் துவங்கி விட்டது.

கட்சிக்காக உழைத்த எங்களை எல்லாம் விட்டு விட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தவரை தீடிரென தலைவராக்கிவிட்டார்கள் என்ற சீனியர் தலைவர்களின் குமுறல்கள் தமிழ்நாடு முழுவதும் கேட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் NO சீட்..  அண்ணாமலையின் திட்டத்தால் கடுப்பில் பா.ஜ.க சீனியர்கள்: முற்றும் மோதல்!

பிறகு பதவிக்கு வந்த உடன் சீனியர் தலைவர்களிடம் எந்தவிதமான ஆலோசனையும் கேட்காமல் தனக்கு ஆதரவானவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு கட்சியை வழிநடத்தி வருகிறார் அண்ணாமலை.

மேலும் தொடர்ந்து ஊட்டங்களை மிரட்டியும் தான் மட்டும்தான் பா.ஜ.கவின் தலைவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருவது சீனியர் தலைவர்களுக்குக் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தலைமைக்கு எடுத்துச் சென்றாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை என புலம்புகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் NO சீட்..  அண்ணாமலையின் திட்டத்தால் கடுப்பில் பா.ஜ.க சீனியர்கள்: முற்றும் மோதல்!

டெல்லியின் ஆதரவு இருப்பதால் அண்ணாமலை தொடர்ந்து சீனியர்களை ஓரங்கட்டி வருகிறார். இதன் எடுத்துக்காட்டுதான் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகியது. அதேபோல் தமிழ்நாட்டில் முக்கிய எந்த பிரச்சனை நடத்தாலும் சீனியர் தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் யாரும் பதில் கொடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். ஏன் இவர்கள் யாரும் கமலாலயம் பக்கமே எட்டிகூட தற்போது பார்ப்பதில்லை.

இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சீனியர் தலைவர்களுக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என கட்சியின் தலைமைக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சீனியர் நிர்வாகிகள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது அதிருப்தியில் உள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் NO சீட்..  அண்ணாமலையின் திட்டத்தால் கடுப்பில் பா.ஜ.க சீனியர்கள்: முற்றும் மோதல்!

அதிலும் குறிப்பாகப் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா போன்றவர்களுக்கு சீட் வழங்கக் கூடாது என்பதில் உறுதியாக அண்ணாமலை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் அவர்கள் தேர்தலில் பிரச்சாரம் மட்டும் செய்தால் போதும் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அண்ணாமலை vs சீனியர்கள் மோதல் தற்போது உச்சம் தொட்டுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க இந்தமோதல் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

banner

Related Stories

Related Stories