அரசியல்

“விளையாட்டு.. போட்டோஷாப் கட்சி.. மன்னிப்பு கடிதம்.. - புடிச்சுட்டேன்..” செந்தில் பாலாஜி ட்வீட்டால் பரபர..

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பெயரிடாமல் குறிப்பிட்ட கட்சியினரை சாடி விமர்சித்துள்ளார்.

“விளையாட்டு.. போட்டோஷாப் கட்சி.. மன்னிப்பு கடிதம்.. - புடிச்சுட்டேன்..” செந்தில் பாலாஜி ட்வீட்டால் பரபர..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். அந்த பட்டியலில் முதன்மையாகவும், முக்கியமானவராகவும் விளங்குபவர் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்கட்சியினருக்கு மூக்கறுப்பு ஏற்படும் வகையில் பதிலடி கொடுப்பார். அதிமுக முதல் பாஜக வரையுள்ள எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு எதிராக ஒரு வார்த்தை பேசினாலும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் ஒருவர்களில் முக்கியமானவராக இருக்கிறார்.

“விளையாட்டு.. போட்டோஷாப் கட்சி.. மன்னிப்பு கடிதம்.. - புடிச்சுட்டேன்..” செந்தில் பாலாஜி ட்வீட்டால் பரபர..

அதிலும் பாஜகவின் அண்ணாமலைக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அப்படி ஒரு பொருத்தம். அண்ணாமலையின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு பதிலடி கொடுப்பார். பதிலடியோடு மட்டுமல்லாமல் கலாய்க்கவும் செய்வார். அந்த வகையில் அண்மையில் அண்ணாமலை விவகாரத்தில் 'ரபேல் வாட்ச்' சிக்கியது.

இருவருக்குள்ளும் அப்போது நடந்த வார்த்தை போர்களில், அண்ணாமலையால் பதில் கூட கூற முடியாத அளவு இருந்தது. அதோடு பாஜகவுக்கு எதிராக அவர்கள் செய்யும் அட்டூழியங்கள் குறித்தும், காமெடிகள் குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வரும் செந்தில் பாலாஜி தற்போது குறிப்பிடாமல் ஒரு கட்சி குறித்து விமர்சித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில், " கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.

விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை?" என்று குறிப்பிட்டு கேள்வியெழுப்பியுள்ளார்.

“விளையாட்டு.. போட்டோஷாப் கட்சி.. மன்னிப்பு கடிதம்.. - புடிச்சுட்டேன்..” செந்தில் பாலாஜி ட்வீட்டால் பரபர..

பெயரிடப்படாத அந்த 'போட்டோஷாப்' கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் யார் என்று அனைவரும் குழம்பி பதிவின் கீழ் கமெண்ட்ஸ் செய்து கொண்டிருக்கும் நிலையில், ட்விட்டர்வாசி ஒருவர் அதனை தான் கண்டுபிடித்து விட்டதாக கமெண்ட் செய்துள்ளார்.

அவர் செய்த கமெண்டில், "புரிந்தது.. போட்டோசாப் பார்ட்டி - பாரதீய ஜனதா பார்ட்டி.. மாநிலத் தலைவர் - திரு கு. அண்ணாமலை.. இளைஞர் அணி தேசியத் தலைவர் - திரு தேஜஸ்வி சூர்யா.. அப்படியே விமான சர்வீஸ் எங்கிருந்து எங்கே என்பதையும் சொல்லிவிடுங்களேன்" என்று பதிவிட்டுள்ளார்.

எனினும் போட்டோஷாப் கட்சி என்பது பாஜக என்று அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் யார் என்று கேட்டு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories