அரசியல்

“அது honey trap இல்ல: பாடி ஷேமிங் செய்தார் - அண்ணாமலை பெயரை சொல்லி”: சூர்யா மீது பாஜக பெண் நிர்வாகி பகீர்

அலுவலம் வந்த திருச்சி சூர்யா, என்னை பாடி ஷேமிங் செய்தார் என பா.ஜ.க பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா பரபரப்பு புகாரை கிளப்பிருக்கிறார்.

“அது honey trap இல்ல: பாடி ஷேமிங் செய்தார் - அண்ணாமலை பெயரை சொல்லி”: சூர்யா மீது பாஜக பெண் நிர்வாகி பகீர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சமூக வலைதளங்களுக்குச் சென்றாலே இந்த பா.ஜ.க கும்பலின் நாற்றங்கள் சசிக்க முடியவில்லை என்ற மன நிலையில் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். இத்தகைய சர்ச்சையை இவற்றை திட்டமிட்டு பா.ஜ.கவே கிளப்புவதாக சந்தேகமும் எழுந்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தினார். அதேவேளையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்களின் முதலாளிகளை ஆளுநர் சந்தித்துள்ளார்.

இதனை ஆளுநர் மாளிகை திட்டமிட்டு மறைத்ததாகவும் கூறப்பட்டது. இதனால் மக்கள் கொந்தளித்து ஆளுநருக்கு எதிராக கண்டனங்களை எழுப்பிய நிலையில் இடையில் நுழைந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஆதரவாக பேசினார்.

“அது honey trap இல்ல: பாடி ஷேமிங் செய்தார் - அண்ணாமலை பெயரை சொல்லி”: சூர்யா மீது பாஜக பெண் நிர்வாகி பகீர்

இதனிடையே ரபேல் ஊழல் விவகாரம் நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த ரபேல் உதிரி பாகங்களின் மூலம் தயாரிக்கப்பட்ட வாட்ச்சை கட்டி தன்னையே சர்ச்சையாக்கினார்.

இதற்கு முன்பு பா.ஜ.கவில் இருந்த திருச்சி சூர்யாவிற்கும், அதேக்கட்சியை சேர்ந்த டெஸ்சி என்பவரை ஆபாசமாக பேசி பெரும் சர்ச்சைக்குள்ளானது பா.ஜ.க. அதன்பின்னர் அதுபற்றியான பேச்சுக்கள் பூதாகரமான போது பெரிய நடவடிக்கைகளில் எதுவும் அண்ணாமலை எடுக்காத நிலையில், தற்போது மற்றொரு பிரச்சனையை கிளப்பி இருக்கிறார் பா.ஜ.க பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா.

“அது honey trap இல்ல: பாடி ஷேமிங் செய்தார் - அண்ணாமலை பெயரை சொல்லி”: சூர்யா மீது பாஜக பெண் நிர்வாகி பகீர்

அதாவது பா.ஜ.க நிர்வாகியாக இருந்த திருச்சி சூர்யா, அலிஷா அப்துல்லாவை ஆபாசமாக உடலமைப்பை வைத்து விமர்சித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அலிஷா அப்துல்லா, அண்ணாமலை அனுப்பினார் என திருச்சி சூர்யா என் அலுவலகம் வந்தார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அந்த பேட்டியில் தான் பா.ஜ.க.வில் சேர்ந்த 10 10 நாட்கள் கழித்து திருச்சி சூர்யா எனக்கு போன் செய்து அண்ணாமலை நம்பர் கொடுத்ததாகவும், உங்களுக்கு ஆலோசனை வழங்க நேரில் அலுவலகம் வருகின்றேன் என பேசி அலுவலகம் சென்றாகவும் தெரிவித்தார். அலுவலம் வந்த திருச்சி சூர்யா, என்னை பாடி ஷேமிங் செய்தார்.

“அது honey trap இல்ல: பாடி ஷேமிங் செய்தார் - அண்ணாமலை பெயரை சொல்லி”: சூர்யா மீது பாஜக பெண் நிர்வாகி பகீர்

இவை அனைத்தையும் கட்சியின் விதிமுறைப்படி அமர்பிரசாத் ரெட்டியிடம் சொல்லிவிட்டேன். நான் சொன்ன அனைத்தையும் அமர் அண்ணாமலையிடம் கூறினார்.  என் அலுவலகத்தில் 23 கேமராக்கள் இருக்கிறது. இது சிசிடிவி கேமராக்கள். அது ஹனி ட்ராப் இல்லை. நான் திருட்டுத்தனமாக எதையும் செய்யவில்லை. பாஜக தலைவர்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினார். அனைத்திற்கும் ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆனால், அதை வெளியிடுவதற்கு நான் மோசமானவள் இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

பா.ஜ.கவினர் பலரும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் தொடர்ச்சி ஈடுபட்டு வரும் சம்பவம் நாடு முழுவதுமே அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டிலும் கடந்த ஓராண்டில் பெண்கள் மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் பா.ஜ.க நிர்வாகிகள் பலரின் மீது இதுபோல குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories