அரசியல்

“தமிழ் மண்ணில் பாஜக பருப்பு வேகாது.. மோடி, அமித்ஷா காலடியில் அதிமுக” : சிலந்தி சொல்லும் குட்டி ஸ்டோரி!

ஜெயலலிதா உருவப்படத்தின் முன்விளக்கேற்றி, படத்திற்கு மாலை அணிவித்து, ஊதுபத்தி பற்றவைத்து, சூடன், சாம்பிராணி கொளுத்தி அம்மாவின் வணங்கியபடி தொண்டர் ஒருவர், 'இங்கே இருப்பதா?

“தமிழ் மண்ணில் பாஜக பருப்பு வேகாது.. மோடி, அமித்ஷா காலடியில் அதிமுக” : சிலந்தி சொல்லும் குட்டி ஸ்டோரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜெயலலிதா உருவப்படத்தின் முன்விளக்கேற்றி, படத்திற்கு மாலை அணிவித்து, ஊதுபத்தி பற்றவைத்து, சூடன், சாம்பிராணி கொளுத்தி அம்மாவின் வணங்கியபடி தொண்டர் ஒருவர், 'இங்கே இருப்பதா? அங்கே போவதா? மங்கள் நாயகியே சொல்லம்மா' என்று ஒரு பழைய பாடலை ஓரிரு சொற்கள் மாற்றத்துடன் பயபக்தியோடு பாடிக்கொண்டிருக்கிறார்.

அப்போது அவரைக் காண நண்பர் ஒருவர் வருகிறார்.

நண்பர்: என்ன தோழரே; பாடல் எல்லாம் வெகு ஜோரா இருக்கே?

தொண்டர்: நீ வேற... நான் வேதனையில் நொந்துபோய் பாடுறது உனக்கு “ஜோரா தெரியுதா?

நண்பர்: என்னப்பா.. திடீரென புது வேதனை?

தொண்டர்: நம்ம கட்சியை நினைத்தேன்... என் எதிர்காலத்தை எண்ணிப்பார்த்தேன். ஒரே குழப்பமா இருக்கு!

நண்பர்: என்ன குழப்பம் இதிலே... ரெண்டு குதிரையிலே எதிலாவது ஒன்றில் ஏறிக்கொள்ள வேண்டியதுதானே!

தொண்டர்: ரெண்டு எங்கே; நாலு குதிரையில்ல இருக்கு... ஆனா எதுல ஏறினா அது கரை சேர்க்கும். எது குப்புறத் தள்ளும் என்பது தெரியலியே... அதான் அம்மாகிட்டே வேண்டிக்கிட்டிருக்கேன்..

நண்பர்: சுத்த பைத்யக்காரனப்பா நீ; அமித்ஷா - மோடி கிட்ட வேண்ட வேண்டியதை அம்மாகிட்டப் போய் வேண்டிக்கிறியே?

தொண்டர்: நீ... என்ன சொல்ல வர்றே...

EPS & OPS
EPS & OPS
ANI

நண்பர்: எம்.ஜி.ஆர். ஆரம்பிச்சு, அம்மா நடத்தின கட்சியை மோடி, அமித்ஷா காலடியில் வைத்து - அவர்களின் கருணாகடாட்சம், யாருக்குக் கிட்டும் என்பதிலேதானே இவங்க குறியா இருக்காங்க...

தொண்டர்: பி.ஜே.பி.யை சும்மா குற்றம் சாட்டக்கூடாது; இவ்வளவு ஒருவருக்கொருவர் கடுமையா சண்டை போட்டுக் கொண்டு ஒருவர் காலை மற்றவர் வாரிக் கொண்டு, நித்தம் ‘லாவணி" நடத்திக் கொண்டிருக்கும் இவர்களை ஒன்றுபடுத்தி இந்தக் கட்சிக்கு இன்னும் உயிர் கொடுத்துக் கொண்டிருப்பது பி.ஜே.பி.தானே!

நண்பர்: உன்னைப் போல அப்பாவிகள் இருப்பதால்தான் பி.ஜே.பி., அ.தி.மு.க. மீது குதிரை ஏறிசவாரி செய்துகொண்டிருக்கிறது!

தொண்டர்: பி.ஜே.பி. கையில் அ.தி.மு.க. கடிவாளம் அகப்பட்டிருப்பது உண்மைதான். இந்தக் கட்சியை அழிக்க நினைத்திருந்தால், இதிலுள்ள முக்கிய தலைவர்களை மிரட்டி, அவர்களை பி.ஜே.பி.யில் சேர்த்திருக்கலாமே; பல மாநிலங்களில் செல்வாக்குள்ள பிற கட்சித் தலைவர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார்களே; பி.ஜே.பி.யின் தமிழக நிர்வாகிகளில்கூட பலர் ஒரிஜினல் பி.ஜே.பி. இல்லையே!

“தமிழ் மண்ணில் பாஜக பருப்பு வேகாது.. மோடி, அமித்ஷா காலடியில் அதிமுக” : சிலந்தி சொல்லும் குட்டி ஸ்டோரி!

நண்பர்: இவை எல்லாம் எதனால் என்பதைப் புரிந்திருந்தால் இவ்வளவு நாள் அந்தக் கட்சியைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்க மாட்டாயே? தமிழ்நாடு பி.ஜே.பி.யின் மாநில நிர்வாகிகளில் அ.தி.மு.க.வில் இருந்து விலகிய நயினார் நாகேந்திரன், தி.மு.க.விலிருந்து இழுக்கப்பட்ட வி.பி.துரைசாமி, கே.பி.இராமலிங்கம், சமத்துவ மக்கள் கட்சியி விருந்து இழுக்கப்பட்ட கரு.நாகராஜன், அ.தி.மு.க.விலிருந்து இழுக்கப்பட்ட சசிகலா புஷ்பா, தி.மு.க.விலிருந்து இழுக்கப்பட்ட ஏ.ஜி.சம்பத், காங்கிரசிலிருந்து இழுக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் போன்றோர் முக்கிய பொறுப்புகளில் இருப்பது தெரியுமல்லவா?

தொண்டர்: நாடறிந்த விஷயம் தானே?

நண்பர்: பி.ஜே.பி. தன்கட்சியை தமிழகத்தில் வளர்க்க இத்தனை பேரை பல கட்சிகளிலிருந்து இழுத்துள்ள நிலையில், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். போன்றவர்களை ஏன் தங்கள் கட்சிப் பக்கம் இழுக்காமல் இருக்கிறார்கள். சிந்தித்தாயா?

தொண்டர்: குழப்புகிறாயே!

நண்பர்: குழப்பவில்லை; விளங்க வைக்க விரும்புகிறேன்! தமிழகத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க.வின் நிலை நோட்டாவுடன் போட்டியிடும் நிலைதான் உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறாயா?

தொண்டர்: உண்மை அதுதானே! மறுக்க இயலாத உண்மை!

“தமிழ் மண்ணில் பாஜக பருப்பு வேகாது.. மோடி, அமித்ஷா காலடியில் அதிமுக” : சிலந்தி சொல்லும் குட்டி ஸ்டோரி!

நண்பர்: தமிழகத்தில் பா.ஜ.க.வை வளரச் செய்ய, தாமரையை மலரச் செய்ய எத்தனை தகிடுதத்தங்களை பா.ஜ.க. செய்து வருகிறது என்பது தெரியுமல்லவா?

தொண்டர்: விளக்கமாகச் சொன்னால்தானே புரியும்!

நண்பர் : ஒரு கட்டத்தில் தமிழ்நாடு பி.ஜே.பி., பாரதிய ஜனதா பார்ட்டியாக இல்லை, பிராமண ஜனதா பார்ட்டி எனுமளவு, பிராமண ஆதிக்கம் அந்தக் கட்சியில் கொடிகட்டிப் பறந்தது; என்பதா வது தெரியுமா?

தொண்டர்: தெரியும்; அதனாலென்ன?

நண்பர்: திராவிட இயக்கம் வேரூன்றி விட்ட தமிழ்மண்ணில், எந்த ஆதிக்கமும் தலை எடுக்க முடியாது என்பதை அறிந்து, பா.ஜ.க. தலைமை சில கோடரிக் காம்புகளைத் தயார் செய்து தமிழ் மண்ணில் பி.ஜே.பி. தலைவராக்கி, ‘பிராமண ஜனதா கட்சி' என்ற தோற்றத்தை மாற்ற நினைத்தனர். தொண்டர்: அதனால்தான் ராதாகிருஷ்ணன்கள், தமிழிசை, முருகன், அண்ணாமலை என்று சிலரை தலைவராக்கினார்களோ?

நண்பர்: அதுமட்டுமல்ல;பி.ஜே.பி. தமிழக நிர்வாகிகளிலேயின் பிராமணர்கள் குறைவு. தொண்டர்: இதனால் பி.ஜே.பி.யிலிருந்த பிராமணர்களுக்குக் கோபம் வராதா?

“தமிழ் மண்ணில் பாஜக பருப்பு வேகாது.. மோடி, அமித்ஷா காலடியில் அதிமுக” : சிலந்தி சொல்லும் குட்டி ஸ்டோரி!

நண்பர்: அங்கேதான் உனக்கும் எனக்கும் - அவர்களுக்குமிடையே உள்ள வித்தியாசத்தை உணர முடியும்.

தொண்டர்: என்ன சொல்ல வருகிறாய்?

நண்பர்: தங்களது இலக்கை அடைய எதையும் விட்டுக்கொடுக்கத் தயங்காதவர்கள் அவர்கள்! நீ செய்தித் தொலைக்காட்சிகளில் வரும் விவாத மேடைகளைப் பார்த்திருப்பாயே! 'வலதுசாரிகள்' என்ற போர்வையில் அமர்ந்துகொண்டு பி.ஜே. பி.க்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் வக்காலத்து வாங்கிப் பேசும் பெரும்பாலானவர்கள் யார் என்பதைப் பார்த்ததில்லையா? 'அநியாயம்' என்று அவர்கள் மனசாட்சிக்குத் தெரிந்திருந்தும், அதனை நியாயப்படுத்திட மனசாட்சியை மூட்டை கட்டி ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, வாதிடுவதைக் கண்டதில்லையா?

தொண்டர்: அதேசமயம் அவர்கள் அ.தி.மு.க. நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையையும் பார்த்திருக்கிறேன்கிறேன்!

நண்பர்: கலைஞர் அன்றே "அபிமன்யூ” படத்தில் எழுதிய வசனம் ஒன்றில் 'அங்கே தான் இருக்கிறது ஆச்சாரியாரின் சூழ்ச்சி” என்று எழுதியிருப்பார்; அது தி.மு.க. தலைவர் போல அங்கேதான் இருக்கிறது அவர்களது சூழ்ச்சி!

தொண்டர்: இதையெல்லாம் விடு இன்றைய அ.தி.மு.க. தலைவர்களை சுலபமாக பி.ஜே.பிக்கு இழுத்திருக்கலாமே; ஏன்அதனைச் செய்யவில்லை?

நண்பர்: இதுகூடப்புரிய வில்லையா? அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை, பி.ஜே.பி.க்கு இழுப்பது என்பது இன்றைய அமித்ஷா - மோடியால் இயலாத காரியமல்ல; சும்மா கைவிரலால் ஒரு சொடக்கு போட்டால் போதும், அங்கே ஓடி தஞ்சம் புகுந்துவிடுவார்கள். இருந்தும் செய்யாததற்குக் காரணம், தமிழ்மண்ணில் பி.ஜே.பி. என்ற பருப்பு வேகாது என்பது தெரியும். பிற மாநிலங்களில் உள்ளது போல தனிமனித செல்வாக்கு கட்சிக்கு பலம் தருவது போல, இங்கு இல்லை; கட்சியின் செல்வாக்கில்தான் தனி மனிதர்கள் தாங்கப்படுகிறார்கள்.

“தமிழ் மண்ணில் பாஜக பருப்பு வேகாது.. மோடி, அமித்ஷா காலடியில் அதிமுக” : சிலந்தி சொல்லும் குட்டி ஸ்டோரி!

தொண்டர்: இது தெரிந்திருந்தும் அமித்ஷா - மோடி போன்றோர் ஏன் அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டும்? எங்கள் கட்சியின் கோஷ்டிகள் எல்லாம் "ஏன் பி.ஜே.பி.யின் ஆதரவு எனக்குத்தான்..." "இல்லை, இல்லை, உனக்கில்லை; எனக்குத்தான்" - என சண்டை போட வேண்டும்?

நண்பர்: பூனைகள் அப்பத்துக் குச்சண்டையிட, குரங்கு தலையிட்டு அப்பம் பங்கிட்ட கதை போல அவர்கள் தலையிட்டுள்ளனர்; அவ்வளவுதான்! இந்தத் தலையீடு எங்கு போய் முடியும் என்பதை உன்னைப் போன்ற தொண்டர் கள் சிந்திக்க வேண்டாமா?

தொண்டர்: சிந்திக்க இனி என்ன இருக்கிறது; எல்லாமே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது. பூனை கள் சண்டையில் அப்பத்தை முழுவதுமாக அபகரித்த குரங்கு போல பா.ஜ.க. இது திட்டமிடுகிறது. சண்டைபோடும் பூனைகளுக்குப் புரிய வேண்டுமே.

நண்பர்: புரியாமல் இல்லை; நன்றாகவே புரியும். புரிந்தும் அதனைக் காட்டிக் கொள்ள முடியாது; மடியில் உள்ள கனம் மண்டி போட வைக்கிறது; குரங்கு கையில் நாட்டாமை உள்ளதே!

தொண்டர்: இப்போது எல்லாம் புரிந்துவிட்டது.

நண்பர்: என்ன புரிந்தது? தொண்டர்: பாட்டிலேயே பதில் சொல்கிறேன்; கேட்டுக்கொள். ”என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே!"

நண்பன்: யாரப்பா தலைவர்?

அந்தத் தொண்டர்: மக்கள் குரனுக்கு செவிசாய்த்து, மக்களோடு மக்களாகப் பயணித்து 'திராவிட மாடல்" ஆட்சியைக் கொடுக்கும் தலைவர்தான்!

- சிலந்தி.

Related Stories

Related Stories