அரசியல்

இது காவிகளின் சங்கமம்.. எத்தனை தமிழ்ச் சங்கமத்தை நடத்தினாலும் தமிழர்களின் இதயத்தில் நுழைய முடியாது!

ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழுக்கு ஆட்சி மொழி தகுதி அளிக்கப்படவில்லை. தமிழகத்தில் ஒன்றிய அரசு நடத்தும் கேந்தி ரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத் தமிழ் பாடத்திட்டம் இல்லை.

இது காவிகளின் சங்கமம்.. எத்தனை தமிழ்ச் சங்கமத்தை நடத்தினாலும் தமிழர்களின் இதயத்தில் நுழைய முடியாது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாய தமிழ் பாடத்திட் டம் இல்லை. டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் ஆண்டுகளாக தமிழ்ப் பேராசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

இவ்வாறு தமிழர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசு எத்தனை தமிழ்ச் சங் கமத்தை நடத்தினாலும், தமிழர்களின் இதயத்தில் நுழைய முடியாது என ‘தீக்கதிர்' நாளேடு 19.11.2022 தேதியிட்ட இதழில் ‘தமிழ்ச்சங்கமம் அல்ல; காவிகளின் சங்கமம்' என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அது வருமாறு:-

தமிழகத்தில் காலூன்றுவதற்காக பா.ஜ.க தீவிரமாக முயன்று வருகிறது. தமிழ் மொழியின் மீதும் தமிழக கலாச்சாரத்தின் மீதும் அக்கறை இருப்பது போல காட்டிக்கொள்ள எதையாவது செய்வது அக்கட்சியின் வாடிக்கை. இதற்கு முட்டுக்கொடுக்கும் வகையில் ஒன்றிய அரசு நடந்துகொள்கிறது.

இது காவிகளின் சங்கமம்.. எத்தனை தமிழ்ச் சங்கமத்தை நடத்தினாலும் தமிழர்களின் இதயத்தில் நுழைய முடியாது!

ஒன்றிய கல்வி அமைச்ச கத்தின் நிதியுதவியுடன் உத்தரப்பிரதேச பா.ஜ.க அரசின் ஆதரவோடு காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்தப்படுகிறது. இதற்காகத் தமிழகத்திலிருந்து 2500க்கும் மேற்பட்டோர் அணி அணியாக வாரணாசிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்கள். ஐ.ஐ.டி மற்றும் இதர பிரதான கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள், குறி வைத்து அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 

கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற பாஜக அரசு இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணியக் கூடாது. பள்ளி வளாகங்களுக்குள் மதரீதியான குறியீடுகள் இருக்கக் கூடாது என்கிறது. ஆனால் ஐஐடி மற்றும் இதர கல்விக்கூடங்களில் இருந்து மாணவர்களை மதரீதியாக ஒருங்கிணைக்கும் பணியை ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கிறது.

இது காவிகளின் சங்கமம்.. எத்தனை தமிழ்ச் சங்கமத்தை நடத்தினாலும் தமிழர்களின் இதயத்தில் நுழைய முடியாது!

தமிழக ஆளுநரும் ஒன்றிய இணை அமைச்சர் முருகனும் காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிக்குப் பங்கேற்கச் சென்ற மாணவர்களுக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் காவித் துண்டு அணிவித்து வழியனுப்பி வைத்துள்ளனர். இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமானது. காசி தமிழ்ச் சங்கமம் குறித்து ஒன்றிய அரசு தமிழக உயர் கல்வித்துறை அல்லது தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையோடு விவாதிக்கவில்லை. 

தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் அக்கறை இருப்ப தாக மோடி அரசும் பா.ஜ.க-வும் காட்டிக்கொள்கின்றன. ஆனால் அவர்கள் ஆளும் உத்தரப்பிரதே சத்தில் திருவள்ளுவர் சிலை பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கங்கை நதியோரம் கிடக்கிறது. சாமி யார்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலையை நிறுவ முடியவில்லை. காசி தமிழ்ச் சங்கமம் நடத் தும் ஒன்றிய அரசு தமிழுக்கு இதுவரை என்ன செய்திருக்கிறது?

இது காவிகளின் சங்கமம்.. எத்தனை தமிழ்ச் சங்கமத்தை நடத்தினாலும் தமிழர்களின் இதயத்தில் நுழைய முடியாது!

ஒன்றிய அரசின் முக்கியமான தேர்வுகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் நடத்தப்படுகின்றன. சமஸ்கிருதத்திற்கு இணை யாக உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு போதுமான நிதி யுதவியை அளிக்க மறுக்கிறது. “தொன்மை வாய்ந்த மொழி தமிழ்’’ என்று பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தால் போதாது, அதற்குரிய அங்கீகாரத்தைத் தரவேண்டாமா?

ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழுக்கு ஆட்சி மொழி தகுதி அளிக்கப்படவில்லை. தமிழகத்தில் ஒன்றிய அரசு நடத்தும் கேந்தி ரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத் தமிழ் பாடத்திட்டம் இல்லை. தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ்ப் பேராசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசு எத்தனை தமிழ்ச் சங்கமத்தை நடத்தினாலும் தமிழர்களின் இதயத்தில் நுழைய முடியாது.

banner

Related Stories

Related Stories