அரசியல்

"நீங்க வெளிய போங்க.." -கேள்விக்கு பதிலளிக்காமல் செய்தியாளர்களை துரத்திய கேரள ஆளுநர்: வலுக்கும் எதிர்ப்பு!

2 செய்தி தொலைக்காட்சிகளின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களை வெளியேற சொன்ன கேரளா ஆளுநரின் செயல் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

"நீங்க வெளிய போங்க.." -கேள்விக்கு பதிலளிக்காமல் செய்தியாளர்களை துரத்திய கேரள ஆளுநர்: வலுக்கும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

2 செய்தி தொலைக்காட்சிகளின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களை வெளியேற சொன்ன கேரளா ஆளுநரின் செயல் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் தற்போது பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஆளுநராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த ஆரிஃப் முகமது கான். பாஜக ஆட்சி புரியாத மாநிலங்களில் ஆளுநர்கள் தொல்லை அதிகரித்த வண்ணமாகவே காணப்பட்டு வருகிறது.

"நீங்க வெளிய போங்க.." -கேள்விக்கு பதிலளிக்காமல் செய்தியாளர்களை துரத்திய கேரள ஆளுநர்: வலுக்கும் எதிர்ப்பு!

அந்த வகையில் தமிழ்நாட்டில் முன்பு பன்வாரிலால் புரோஹித், தற்போது ஆர்.என்.ரவி. அதே போல் இடதுசாரி சிந்தனைகொண்ட கேரளா அரசுக்கும், வலதுசாரி சிந்தனைகொண்ட பாஜகவை சேர்ந்த ஆளுநர் ஆர்ஃப் முகமது கானுக்கும் அண்மைக்காலமாக அரசியல் ரீதியான மோதல் போக்கு காணப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பான விஷயங்களில் ஆளுநரின் செயல்பாடு காரணமாக மாநில அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டை போல கேரளத்திலும் துணை வேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார்.

"நீங்க வெளிய போங்க.." -கேள்விக்கு பதிலளிக்காமல் செய்தியாளர்களை துரத்திய கேரள ஆளுநர்: வலுக்கும் எதிர்ப்பு!

இந்த பரபரப்பான சூழலில் கேரளாவிலுள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த உத்தரவுக்கு ஆளும் இடதுசாரி அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து ஆளுநரின் உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இது தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது துணை வேந்தர்கள் பதவியில் நீடிக்கலாம் என நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

"நீங்க வெளிய போங்க.." -கேள்விக்கு பதிலளிக்காமல் செய்தியாளர்களை துரத்திய கேரள ஆளுநர்: வலுக்கும் எதிர்ப்பு!

இதைத்தொடர்ந்து கடும் அரசியல் மோதல் போக்கு தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஆளுநர் விருந்தினர் மாளிகையில் நேற்று காலை செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இரண்டு செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்களை வெளியேறச்சொன்னார் கேரள ஆளுநர்.

அதாவது கேரளாவில் மிகவும் பிரபல செய்தி நிறுவனமான கைரளி நியூஸ் மற்றும் மீடியா ஒன் ஆகிய 2 மலையாள செய்தி தொலைக்காட்சி செய்தியாளர்கள் வெளியேற வேண்டும். அவர்கள் வெளியேறுமாறும், அவர்களை தான் சந்திக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் வெளியேறினால் தான், நான் பத்திரிகையாளர் சந்திப்பேன் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆரிஃப் முகமது கான், "நான் ஊடகங்களை முக்கியமாவையாக கருதுகிறேன். ஆனால் இப்போது ஊடகங்கள் என்று மாறுவேடமிடுபவர்களை என்னால் கையாள முடியவில்லை. அவர்கள் ஊடகங்கள் என்ற பெயரில் அரசியல் கூட்டாளிகளாக இருக்கிறார்கள். அவ்வாறு ஒரு கட்சி சார்புடையவாராக இருக்கும் பத்திரிகையாளர்கள் இருந்தால் உடனடியாக வெளியேறி விடுங்கள்" என்றார்.

மேலும் மீடியா ஒன் சேனலை குறிப்பிட்ட அவர், "நீங்க வெளியே போங்க.. உங்களிடம் பேச விருப்பமில்லை. கைரளி செய்தியிடமும் பேச எனக்கு விருப்பமில்லை. நீங்கள் எனக்கு எதிராக செய்தியை வெளியிடுகிறீர்கள். அவர்கள் இருந்தால் நான் கிளம்பிவிடுவேன், பேசமாட்டேன்.'' என கறாராக கூறினார்.

"நீங்க வெளிய போங்க.." -கேள்விக்கு பதிலளிக்காமல் செய்தியாளர்களை துரத்திய கேரள ஆளுநர்: வலுக்கும் எதிர்ப்பு!

பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்களை வெளியேற சொன்ன கேரளா ஆளுநரின் செயலுக்கு ஆளுங்கட்சி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கடந்த அக்டோபர் 24-ம் தேதி, இதே கைரளி, மீடியா ஒன் உள்ளிட்ட 4 மலையாள செய்தி சேனல்கள் ஆளுநரின் செய்தியாளர் சந்திப்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள ராஜ் பவன் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் வெளியேற சொன்ன கைரளி செய்தி நிறுவனம் கேரளாவில் ஆளுங்கட்சியாக இருக்கும் சிபிஐ (எம்) கட்சியின் தொலைக்காட்சி என்பது குறிபிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories