அரசியல்

மோடியின் பேச்சை சொந்த கட்சியே மதிக்காத சோகம்.. இமாச்சல் தேர்தலில் இலவச வாக்குறுதிகளை வாரி இறைத்த பாஜக !

இமாச்சல் தேர்தலில் பாஜக இலவச வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோடியின் பேச்சை சொந்த கட்சியே மதிக்காத சோகம்.. இமாச்சல் தேர்தலில் இலவச வாக்குறுதிகளை வாரி இறைத்த பாஜக !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இலவத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன.

மோடியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், "பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களை இலவசம் என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதாரப் புரட்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

மோடியின் பேச்சை சொந்த கட்சியே மதிக்காத சோகம்.. இமாச்சல் தேர்தலில் இலவச வாக்குறுதிகளை வாரி இறைத்த பாஜக !

அதன்பின்னர் இலவசம் குறித்து ஆங்கில ஊடகத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோரும் மோடியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் வெற்றிபெற பாஜக தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில், பாஜக சார்பில் இமாச்சல பிரதேச மாநில வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் பேச்சை சொந்த கட்சியே மதிக்காத சோகம்.. இமாச்சல் தேர்தலில் இலவச வாக்குறுதிகளை வாரி இறைத்த பாஜக !

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் அஸ்வினி உபத்யாயா இலவசங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பிரதமர் மோடியின் இலவசங்களுக்கு எதிராக பேசிய நிலையில், தற்போது இமாச்சல் தேர்தலில் பாஜக இலவச வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories