அரசியல்

"என்னை முதல்வராக்குவதாக ஆசைக்காட்டினார்கள்.." - ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியாவின் குற்றசாட்டை மறுத்த CBI..

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீதான சோதனை தொழில்முறை மற்றும் சட்டபூர்வமான முறையில் நடத்தப்பட்டதுதான் என சிபிஐ தெரிவித்துள்ளது.

"என்னை முதல்வராக்குவதாக ஆசைக்காட்டினார்கள்.." - ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியாவின் குற்றசாட்டை மறுத்த CBI..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் தற்போது ஆளும் கட்சியாக இருந்து வரும் பாஜக தங்களது கட்சியை பலப்படுத்தப்பட்ட பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது. மேலும் வட மாநிலங்களில் சில ஆளும் கட்சிகளை கவிழ்க்கவும் திட்டமிட்டது. அந்த வகையில் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட ஆளும் கட்சியான சிவ சேனா ஆட்சியை கவிழ்த்தது.

அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்டு 'மகா விகாஸ் அகாடி ' என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த கூட்டணியை பா.ஜ.க. கலைக்க பல்வேறு யுக்திகளை செய்து வந்த நிலையில், சிவ சேனா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆட்சியை கவிழ்த்தார்.

"என்னை முதல்வராக்குவதாக ஆசைக்காட்டினார்கள்.." - ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியாவின் குற்றசாட்டை மறுத்த CBI..

மேலும் ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் சேர்ந்து பெரும்பான்மையை காட்டி தற்போது மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உள்ளார். இது ஒரு புறம் இருக்க, அண்மையில் பஞ்சாபில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதோடு ஆம் ஆத்மி கட்சி ஆங்காங்கே தங்களது செல்வாக்கை நிரூபித்து வருகின்றன. இதனால் மத்திய பாஜகவின் கவனம் வளர்ந்து வரும் ஆம் ஆத்மி கட்சி மீது திரும்பியுள்ளது.

அது மட்டுமல்லாது தலைநகர் டெல்லியிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருவதால், அங்கே அவ்வப்போது கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கலைக்க முயன்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தது. மேலும் அக்கட்சியிலுள்ள முக்கிய உறுப்பினர்களுக்கு பணத்தாசை காட்டி தங்களது பக்கம் இழுக்கவும் முயன்று வருகிறது.

"என்னை முதல்வராக்குவதாக ஆசைக்காட்டினார்கள்.." - ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியாவின் குற்றசாட்டை மறுத்த CBI..

அதன்படி சமீபத்தில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி அரசின் மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு என குற்றம்சாட்டி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து, சொந்தமான 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

"என்னை முதல்வராக்குவதாக ஆசைக்காட்டினார்கள்.." - ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியாவின் குற்றசாட்டை மறுத்த CBI..

மேலும் மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு வருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா , "ஆம் ஆத்மியை இரண்டாகப் பிளவுபடுத்தி பாஜகவில் இணைய வேண்டும், அப்படிச் செய்தால் அனைத்து வழக்குகளையும் முடித்து விடுகிறோம் என மிரட்டியதாகத் தெரிவித்தார்.

இது டெல்லி அரசியலில் பெரிய புயலை கிளப்பியது. மேலும் டெல்லியில் ஆம்.ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்க அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது" என கூறினார்.

"என்னை முதல்வராக்குவதாக ஆசைக்காட்டினார்கள்.." - ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியாவின் குற்றசாட்டை மறுத்த CBI..

இதை உறுதி செய்யும் விதமாக, ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், "கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தால் ரூ.20 கோடி தருவதாகப் பேரம் பேசியதாக" தெரிவித்தார். மகாராஷ்டிரா, கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்த்ததுபோல் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க சதிசெய்து வருவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது மணீஷ் சிசோடியா மேலும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், "டெல்லியில் ஆபரேஷன் தாமரையை வெற்றிகரமாக்குவதற்காக மட்டுமே இப்படிப்பட்ட விசாரணை என்னிடம் நடத்தப்பட்டுள்ளது.. ஆனால், ஆம் ஆத்மியை விட்டு, பாஜகவுக்கு செல்ல மாட்டேன். முதல்வர் பதவியை தருவதாக சொன்னார்கள். அதையும் மறுத்துவிட்டேன்" என்றார்.

"என்னை முதல்வராக்குவதாக ஆசைக்காட்டினார்கள்.." - ஆம் ஆத்மி மணீஷ் சிசோடியாவின் குற்றசாட்டை மறுத்த CBI..

இதைத்தொடர்ந்து சிபிஐ, மணீஷ் சிசோடியாவின் இந்த பகிரங்க குற்றசாட்டை மறுத்துள்ளது. மேலும் இந்த சோதனை தொழில்முறை மற்றும் சட்டபூர்வமான முறையில் நடத்தப்பட்டதுதான் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும் அடுத்து வரப்போகும் குஜராத் மாநிலத்தேர்தலில், பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியை பிளவுபடுத்த பாஜக பச்சையாக ஒரு திட்டம் தீட்டியிருக்கிறது.

மேலும் வரப்போகும் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் சிசோடியா பங்கெடுப்பதை தடுக்கும் நோக்கத்தில் அவர் கைது செய்யப்படலாம் என்றும், அந்த தேர்தல் முடியும் வரை அவர் சிறையில் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது எனது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories