அரசியல்

பஞ்சாபில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் ரத்து.. ஆளுநரின் முடிவுக்கு ஆளும் ஆம் ஆத்மி கண்டனம்.. நடந்தது என்ன?

பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட பஞ்சாப் ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் ரத்து.. ஆளுநரின் முடிவுக்கு ஆளும் ஆம் ஆத்மி கண்டனம்.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு நடைபெற்று வருகிறது. அங்கு தற்போதைய ஆளுநராக தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செயல்பட்டு வருகிறார்.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை ஆளுநர்களை வைத்து ஒன்றிய அரசு மறைமுக அரசியல் செய்வதுபோல பஞ்சாபிலும் ஆளும் மாநில அரசை எதிர்த்து ஆளுநர் செய்யப்பட்டு வருகிறார். இதற்கு ஆம் ஆத்மி அரசு பல்வேறு தருணங்களில் கண்டனம் தெரிவித்துள்ளது.இதே போல கடந்த மாதம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மதநிகழ்ச்சிக்கு ஆன செலவை ஏற்கமுடியாது என மாநில அரசு கூறியது இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.

பஞ்சாபில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் ரத்து.. ஆளுநரின் முடிவுக்கு ஆளும் ஆம் ஆத்மி கண்டனம்.. நடந்தது என்ன?

அதைத் தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக முயல்வதாகவும் தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசுவதாகவும் குற்றம்சாட்டிய அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தாமாக முன்வந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குகோரினார். பின்னர் அந்த வாக்கெடுப்பில் அவர் வெற்றியும் பெற்றார்.

இதேபோல தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் தலா 25 கோடி ரூபாய் வரை தருவதாக கூறி பாஜகவினர் பேரம் பேசுவதாக பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டி சாட்டி வந்தனர். இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலில் கருத்தை பின்பற்றி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் யாரும் பாஜக பக்கம் தாவவில்லை என்பதை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குகோர உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்தார்.

பஞ்சாபில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் ரத்து.. ஆளுநரின் முடிவுக்கு ஆளும் ஆம் ஆத்மி கண்டனம்.. நடந்தது என்ன?

இதைத் தொடர்ந்து, வரும் 22ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக மட்டும் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட பஞ்சாப் சட்டப்பேரவை விதிகளில் இடமில்லை என சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பிரதாப் சிங் பஜ்வா உள்ளிட்டவர்கள் அளித்த புகார் குறித்து சட்ட வல்லுநர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறி தனது முந்தைய உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது திரும்பப்பெற்றுள்ளார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories