அரசியல்

டெல்லி செங்கோட்டை.. இந்திய அரசியலின் அதிகார பீடமானது இப்படிதான்..முகலாயர் TO மோடி !

இஸ்லாமியரால் கட்டப்பட்டு ஆங்கிலேய அதிகாரத்தை அறிவிக்கும் இடமாக மாறி பல வரலாற்றுத் தருணங்களை கொண்டிருந்தது செங்கோட்டை.

டெல்லி செங்கோட்டை.. இந்திய அரசியலின் அதிகார பீடமானது இப்படிதான்..முகலாயர் TO மோடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை தொடர்ந்து ஊக்குவிக்கும் பாஜக, இந்திய வரலாற்றிலிருந்து இஸ்லாமியரின் பங்களிப்பை என்றுமே அகற்ற முடியாது. இஸ்லாமியரின் தியாகங்களால் நிரம்பியதே இந்தியத் துணைக்கண்ட வரலாறு.

வெறுப்பு அரசியலை அமைதியாக வேடிக்கைப் பார்த்து முன்னகர்த்தும் அனுமதியை வழங்கும் மோடி கூட சுதந்திர தினத்தன்று இஸ்லாமியரின் தயவில்தான்.

செங்கோட்டை!

இஸ்லாமியர்களின் கலைநயம்தான் செங்கோட்டை!

ஆக்ராவிலிருந்து தலைநகரை தில்லிக்கு மாற்ற முடிவெடுத்து அங்கு வாழ்வதற்கென கட்டப்பட்ட அரண்மனைதான் செங்கோட்டை.

யார் கட்டியது? முகலாய அரசர் ஷாஜகான்.

பத்து வருடங்கள் பலரின் உழைப்பை உறிஞ்சு கட்டிய இடம் அது. மொகலாய அரசனால் கட்டப்பட்ட செங்கோட்டை கடைசி மொகலாய அரசர் பகதூர் ஷா வரை தஞ்சம் அளித்த இடம்.

டெல்லி செங்கோட்டை.. இந்திய அரசியலின் அதிகார பீடமானது இப்படிதான்..முகலாயர் TO மோடி !

அவுரங்சிப்புக்கு பிறகு சொல்லிக் கொள்வது போன்ற நல்லாட்சி தர மொகலாயர்கள் தவறியதாலும் பாரசீகம், ஆப்கான் முதலிய நாட்டு படையெடுப்புகளாலும் செங்கோட்டை சூறையாடப்பட்டது. கோஹினூர் போன்ற வைரப் பெருமைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 3ல் இரண்டு பங்கு சூறையாடப்பட்டதாக சொல்கிறார்கள்.

மொகலாயர்களுக்கு பின் ஆங்கிலேயர்கள் வசம் செங்கோட்டை சென்றது. அவர்கள் அதைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை. எனினும் திடுமென செங்கோட்டை முக்கியத்துவம் பெற்றது.

ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான அடையாளமாக மாறியது. சிப்பாய் கலகத்தை தொடர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான கலகங்கள் பரவின. செங்கோட்டையிலிருந்த கடைசி மொகலாய அரசரான பகதூர் ஷாவை கலகத்துக்கு தலைமை தாங்க வைத்தனர். ஆனால் ஆங்கிலேயரை வெல்ல முடியவில்லை. மீண்டும் ஆங்கிலேயரின் பிடி இறுகியது. போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். செங்கோட்டையிலிருந்து இறுதி மொகலாய பேரரசர் நாடு கடத்தப்பட்டார்.

டெல்லி செங்கோட்டை.. இந்திய அரசியலின் அதிகார பீடமானது இப்படிதான்..முகலாயர் TO மோடி !

சிப்பாய் கலகம் கொடுத்த கோபத்தில் செங்கோட்டை சேதப்படுத்தப்பட்டது. பிறகு ஆங்கிலேயப் படை கொத்தளமாக பயன்படுத்தப்பட்டது. செங்கோட்டையின் பல பகுதிகள் அழிக்கப்பட்டு ஆங்கிலேயர் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவின் ஆட்சி அதிகாரம் இங்கிலாந்து ராணிக்கு என அறிவிக்கப்பட்ட பிறகு 1911ம் ஆண்டில் செங்கோட்டையின் உப்பரிகையில் ராணியும் அரசரும் தோன்றி புகைப்படம் எடுத்துக் கொண்டு அதிகாரத்தை ஆவணப்படுத்தினர்.

இஸ்லாமியரால் கட்டப்பட்டு, அதிகாரத்துக்கான அடையாளமாக மாற்றப்பட்டு, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மக்கள் கலகத்தின் தோற்றமாக தாங்கப்பட்டு, பின் ஆங்கிலேய அதிகாரத்தை அறிவிக்கும் இடமாக மாறி பல வரலாற்றுத் தருணங்களை கொண்டிருந்தது செங்கோட்டை.

டெல்லி செங்கோட்டை.. இந்திய அரசியலின் அதிகார பீடமானது இப்படிதான்..முகலாயர் TO மோடி !

இறுதியாக ஆங்கிலேய அதிகாரம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ஸின் இந்திய தேசிய ராணுவத்தை பற்றிய விசாரணையை செங்கோட்டையில் நடத்தியது. இஸ்லாமியர் உள்ளிட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்கள் செங்கோட்டைக்குள்ளேயே சிறைகள் அமைக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்தனர். இந்திய தேசிய ராணுவத்தின் மீது இருந்த அபிமானத்துடன் இந்திய விடுதலை வீரர்களை இந்திய நினைவுச் சின்னத்தில் வைத்து விசாரித்து அதிகாரத்தை காண்பிப்பதா என்கிற கோபமும் சேர்ந்து பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஒரு பெரும் வரலாற்று ஓட்டம் முடிந்து 1947 ஆகஸ்ட15ம் தேதி ஜவஹர்லால் நேரு செங்கோட்டையில் இந்தியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். அந்த வழக்கமே தொடரப்பட்டு ஒவ்வொரு சுதந்திர தினத்துக்கும் இந்தியப் பிரதமர் செங்கோட்டையில் பேசும் மரபு உருவானது.

கடந்த 15ம் தேதி மோடி நின்று பேசியதும் இதே செங்கோட்டையிலிருந்துதான்.

banner

Related Stories

Related Stories