அரசியல்

"நாங்கள் எதிர்ப்பு அரசியல் செய்யவில்லை; உரிமை அரசியல் செய்கிறோம்" - தயாநிதிமாறன் எம்.பி. பேட்டி!

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலுநாச்சியார், கொடிகாத்த குமரன் ஆகியோருக்கு நாம் கவுரவம் செலுத்துகிறோம். ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டி விட்டு அவர்கள் காவி நிறம் பூசி குடியரசு தினம் கொண்டாட நினைக்கிறார்கள்.

<div class="paragraphs"><p>File image</p></div>
<div class="paragraphs"><p>File image</p></div>
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் புதிதாக நியாய விலைக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே. சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் முன்னிலையில், உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி திறந்து வைத்தார்.

இதையடுத்து ஏழுகிணறு மங்கம்மாள் சந்து பகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் திறந்து வைத்தார்.

பின்னர், சென்னை பாரிமுனை டி.என்.பி.எஸ்.சி சாலையில் உள்ள ரத்தன் பஜார் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவுடன் இணைந்து மக்கள் சேவையே மகேசன் சேவை என பணியாற்றி வருகிறோம். அதன் விளைவாக இன்று நியாய விலைக்கடை, அங்கன்வாடி மையம், பொதுக் கழிப்பிடம் ஆகியவற்றை மக்களின் தேவையை உணர்ந்து, கோரிக்கையை ஏற்று புதிதாக அமைத்து இன்று திறந்து வைத்துள்ளோம்.

சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயை சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிதாக நாடாளுமன்றத்தை கட்டுகிறோம் என யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ஒன்றிய மோடி அரசு செலவு செய்கிறது. இதனை ஆரம்பம் முதலே நாங்கள் கண்டிக்கிறோம். மக்களெல்லாம் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. எனவே நாங்கள் 20 கோடியை செலவழிக்க வேண்டாம் என்று கேட்டும் அதற்கு பதிலளிக்காமல், அவர்கள் மிருக பலத்துடன் உள்ளதால் இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள்தான் தேச பக்தி உள்ளவர்கள் என்பது போல நடந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலுநாச்சியார், கொடிகாத்த குமரன் ஆகியோருக்கு நாம் கவுரவம் செலுத்துகிறோம். ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டி விட்டு அவர்கள் காவி நிறம் பூசி குடியரசு தினம் கொண்டாட நினைக்கிறார்கள்.

ஒட்டு மொத்தமாக தமிழகம் மீதும், தமிழ்நாட்டின் மீதும் ஒரு எதிர்ப்புணர்வை ஒன்றிய அரசு கொண்டுள்ளது. நாங்கள் எதிர்ப்பு அரசியல் செய்யவில்லை. உரிமை அரசியல் செய்கிறோம். உரிமையை தர மறுப்பதால் குரல் எழுப்புகிறோம்" என்றார்.

banner

Related Stories

Related Stories