அரசியல்

அடுத்த கட்டத்துக்கு நகரும் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: விறுவிறு விசாரணையில் சிக்கும் பகீர் தகவல்கள்!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அடுத்த கட்டமாக ஜம்சீர் அலி மற்றும் ஜித்தீன் ஜாய் ஆகியோர்களிடம் விசாரிக்க சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டத்துக்கு நகரும் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: விறுவிறு விசாரணையில் சிக்கும் பகீர் தகவல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. சயான், கனகராஜின் மனைவி மற்றும் சகோதரர் தனபால், கொடநாடு எஸ்டேட் மேலாளர்  நடராஜன் உள்பட 40 பேரிடம் இதுவரை தனிப்படை போலிசார் விசாரணை நடத்தி உள்ளனர். 

மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மற்றும் டிஐஜி முத்துசாமி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு நாட்களாக கொள்ளை சம்பவத்திற்கு கொள்ளையர்கள் பயன்படுத்திய வாடகை கார்களின் உரிமையாளர்கள் மற்றும் இடைதரகர்களான யாசின், சாயின்ஷா, நவ்சாத், நவ்ஃபுல் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. 

ஜம்சீர் அலி மற்றும் ஜித்தீன் ஜாய்
ஜம்சீர் அலி மற்றும் ஜித்தீன் ஜாய்

இந்த நிலையில் வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேரளாவை சார்ந்த ஜம்சீர் அலி மற்றும் 10-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் ஆகியோரை விசாரிக்க தனிப்படை போலிசார் முடிவு செய்து சம்மன் அளித்துள்ளனர். 

இன்று மதியம் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோத்தகிரி போலிசார் சம்மன் அளித்த நிலையில் கேரளாவில் உள்ள அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை. இவர்கள் இருவரும் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி கார்களை வாடகைக்கு எடுத்து வந்துள்ளனர். எனவே ஓரிரு நாட்களில் இருவரும் விசாரணைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

2 கார்களின் உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் நேற்றும் இன்றும் விசாரணை நடைபெற்ற நிலையில் அடுத்தகட்டமாக இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

banner

Related Stories

Related Stories