அரசியல்

கர்நாடகாவில் தமிழ் எழுத்துகளை அழிக்க அட்டகாசம்: பிரிவினையை ஏற்படுத்த முயன்ற வாட்டாள் நாகராஜ்!

கோலார் தங்க வயல் பேருந்து நிலையத்தில் தமிழ் எழுத்துக்களை அழித்து பிரிவினையை ஏற்படுத்த முயன்ற வாட்டாள் நகராஜின் முயற்சி தோல்வி அடைந்தது.

கர்நாடகாவில் தமிழ் எழுத்துகளை அழிக்க அட்டகாசம்: பிரிவினையை ஏற்படுத்த முயன்ற வாட்டாள் நாகராஜ்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் பெரும்பான்மையாக தமிழர்கள் வாழக்கூடிய பகுதி. இந்த பகுதியில் தமிழர்களும், கன்னடர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 10ம் தேதி கன்னட சலுவாலி வாட்டாள் பக்‌ஷா கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கோலார் மாவட்டம் தங்க வயல் பேருந்து நிலையத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து கர்நாடகாவில் கன்னட மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என கூறி தமிழில் எழுதப்பட்டு இருந்த பேருந்து நிலைய பெயரை தார் ஊற்றி அழித்தார்.

கர்நாடகாவில் தமிழ் எழுத்துகளை அழிக்க அட்டகாசம்: பிரிவினையை ஏற்படுத்த முயன்ற வாட்டாள் நாகராஜ்!
DELL

இதனால் ஆத்திரம் அடைந்த கோலார் மாவட்டத்தை சேர்ந்த தமிழர்கள் மற்றும் கன்னட மக்கள் வாட்டாள் நகராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து வாட்டாள் நாகரஜை போலீசார் கைது செய்து அங்கிருந்து அகற்றினர்.

இந்த நிலையில் இன்று கோலார் நகர கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீண்டும் பேருந்து நிலையத்தில் தமிழில் பெயர் எழுதுவது எதிர்த்தும் ஒற்றுமையாக வாழும் மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் நடந்துகொண்ட வாட்டாள் நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு கன்னட கவுன்சிலர்களும் ஆதரவு அளித்ததை தொடர்ந்து உடனடியாக பேருந்து நிலையத்தில் மீண்டும் தமிழி பெயர் எழுதப்பட்டது. கோலார் மாவட்டத்தில் தமிழர்கள் மற்றும் கன்னடர்கள் இடையே பிரிவினையை தூண்ட முயன்ற வாட்டாள் நாகராஜின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories