அரசியல்

இதைவிட கேவலம் இல்லை தெரியுமா? உங்கள்விளம்பரத்திற்காக இறந்தவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் பாஜக தலைவர்களே

இறந்தவர்களை வைத்து விளம்பரம் செய்யும் பாஜகவினரை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

இதைவிட கேவலம் இல்லை தெரியுமா?  உங்கள்விளம்பரத்திற்காக இறந்தவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் பாஜக தலைவர்களே
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மறைந்ததை அடுத்து திரையுலக நட்சத்திரங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து திரையுலகினர் மறைந்து வருவதும் ரசிகர்களிடையேவும் தமிழ் சினிமாத் துறையினரிடையேவும் பெரும் சோகம் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மறைந்த கே.வி.ஆனந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதாகக் குறிப்பிட்டு ட்விட்டரில் தமிழக பாஜக பதிவு செய்திருந்தது. ஆனால், அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை இணைத்து வெளியிட்டுள்ளது தமிழக பாஜக.

இது தொடர்பாக விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்ததை அடுத்து அந்த ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்தின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் நேரடியாக மயானத்திற்கு அனுப்பும் பணி நடைபெற்று வரும் வேளையில் எல்.முருகனும் பாஜகவினரும் எப்படி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்க முடியும் என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories