அரசியல்

“இது திராவிட மண்; இங்கு மதத்தின் பேரில் அரசியல் செய்ய முடியாது” - நீலகிரியில் ஆ.ராசா பேச்சு! #DMK4TN

வெற்றி நடை போடும் தமிழகம் என அதிமுக அரசு விளம்பரம் செய்து வரும் நிலையில் 10 ஆண்டு காலமாக தமிழகம் நொண்டி அடிப்பதாக ஆ. ராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

“இது திராவிட மண்; இங்கு மதத்தின் பேரில் அரசியல் செய்ய முடியாது” - நீலகிரியில் ஆ.ராசா பேச்சு! #DMK4TN
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உதகை சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கணேசனை ஆதரித்து நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ ராசா தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது மஞ்சூர் பகுதியில் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா :- “தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஆறு ஆண்டுகள் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியும், நான்காண்டுகள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் என 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆனால் எடப்பாடி பழனிசாமி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெற்றி நடை போடும் தமிழகம் என விளம்பரம் அளித்து வரும் நிலையில் 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகம் நொண்டி அடித்துக் கொண்டிருப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.

பாஜகவும் - அதிமுகவும் கூட்டணி சேர்ந்து இந்துத்துவாவை புகுத்தி வருவதாக குற்றம் சாட்டிய அவர் தமிழகம் என்றைக்கும் திராவிட மண், இந்த மண்ணில் மதத்தின் பெயரால் அரசியல் செய்ய முடியாது என குறிப்பிட்ட ஆ.ராசா தமிழ்நாட்டில் இந்து மத தத்துவவாதிகளை நுழைய விடக்கூடாது, தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும் சமம் என்றார்.

banner

Related Stories

Related Stories