அரசியல்

பா.ஜ.கவின் பேச்சைக் கேட்டு வேட்பாளர் தேர்வில் முஸ்லிம்களை புறக்கணித்த அ.தி.மு.க!? #Election2021

வேட்பாளர்கள் பட்டியலில் கண்துடைப்புக்காக 2 இஸ்லாமியர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளதால் அ.தி.மு.கவினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

பா.ஜ.கவின் பேச்சைக் கேட்டு வேட்பாளர் தேர்வில் முஸ்லிம்களை புறக்கணித்த அ.தி.மு.க!? #Election2021
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. தரப்பில் ஏற்கெனவே 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அக்கட்சி இன்று 2ம் கட்டமாக 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மொத்தமாக அ.தி.மு.க அறிவித்த 177 வேட்பாளர்களில் 2 இஸ்லாமியர்ளுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது அ.தி.மு.க. கம்பம் தொகுதியில் சையது கான், ஆம்பூரில் நஜர் முகமது ஆகியோர் மட்டுமே இஸ்லாமிய வேட்பாளர்கள் ஆவர்.

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா போட்டியிட விருப்பம் தெரிவித்த ராமநாதபுரம் தொகுதியை அவருக்கு கொடுக்க மறுத்து பா.ஜ.கவுக்கு ஒதுக்கியுள்ளது அ.தி.மு.க தலைமை.

அதேபோல இஸ்லாமியர்கள் நிறைந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, வாணியம்பாடி உள்ளிட்ட தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுபோக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபிலையும் அ.தி.மு.க ஓரங்கட்டியுள்ளது.

போகும் இடமெல்லாம் சிறுபான்மையினர்களுக்கு ஆதரவான கட்சி என அதிமுகவினர் பேசி வரும் நிலையில் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் கண் துடைப்புக்காக வெறும் இரண்டே இஸ்லாமிய வேட்பாளர்களை அறிவித்திருப்பது அதிமுகவினரையே அதிர்ச்சியிலும் அதிருப்தியிலும் ஆழ்த்தியிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சியை கொண்டு வந்த பாஜகவினரையும், அதற்கு மனப்பூர்வமான ஆதரவை அளித்த பாமகவினரையும் வேட்பாளராக அறிவித்திருப்பது அதிமுகவினர் மீது மக்களுக்கு இன்னும் கோபக்கணலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ராஜேந்திர பாலாஜி மீது கொலை மிரட்டல் புகார் கூறிய சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளது என காட்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதில், விருதுநகரில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் ராஜேந்திர பாலாஜியின் கைக்கூலிகள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் மாவட்டச் செயலாளர்கள் பலரும் குமுறிக்கொண்டிருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories