அரசியல்

அதிகாரிகளை மிரட்டி அபராதம் விதிக்கக் கூறுவது அராஜகம்: கிரண் பேடி செயலால் கொந்தளித்த முதல்வர் நாராயணசாமி!

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாதவர்களிடம் வலுக்கட்டாயமாக அபராதம் விதிக்கும் நடைமுறைக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளார் முதலமைச்சர் நாராயணசாமி

அதிகாரிகளை மிரட்டி அபராதம் விதிக்கக் கூறுவது அராஜகம்: கிரண் பேடி செயலால் கொந்தளித்த முதல்வர் நாராயணசாமி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹெல்மெட் சட்டம் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் அதிகாரிகளை வைத்து மக்களை துன்புறுத்துவது அராஜக செயல் என்றும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறைக்கு ஹெல்மெட் விவகாரத்தில் அபராதம் விதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது:-

ஹெல்மெட் விவகாரத்தில் அதிகாரிகள் மற்றும் துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து அவர் மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் அபராதம் விதிக்கும் சட்டத்தை எதிர்கட்சிகள் எதிர்த்தும் அது நிறைவேற்றப்பட்டது.

அதை நடைமுறைப்படுத்த பல தடங்கள் இருக்கின்றது என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கு புகார் கொடுத்தும் எந்தவித பலனும் இல்லை. இதுகுறித்து புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டப்பின்பு படிப்படியாக அமல்படுத்தப்படும் என பேரவையில் முடிவெடுக்கபட்டது.

அதிகாரிகளை மிரட்டி அபராதம் விதிக்கக் கூறுவது அராஜகம்: கிரண் பேடி செயலால் கொந்தளித்த முதல்வர் நாராயணசாமி!

புதுச்சேரியில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளும் படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் மோட்டார் வாகன சட்டம் குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்பு தான் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளை மிரட்டி ஹெல்மெட் போடாமல் செல்பவர்களை பிடித்து அதிகளவு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளதால் அதிகாரிகள் பொதுமக்கள் வாகனங்களை பிடிக்கின்றார்கள் இது அராஜக செயல்.

மற்ற மாநிலங்களில் புதிய மோட்டார் வாகன சட்டங்களை அமல்படுத்தினாலும் கெடுபிடிகள் இல்லை ஆனால் புதுச்சேரி மாநில மக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக செயல்படுகிறார். பாஜக நியமித்த ஆளுநர் சட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிடுகின்றார். ஆனால் புதுச்சேரி பாஜக ஹெல்மெட்டுக்கு தடை வேண்டி வலியுறுத்தி இரட்டை வேடம் போடுகின்றது.

புதிய போக்குவரத்து சட்டத்தை படிப்படியாக அமல்படுத்த வேண்டுமே தவிர மக்களை துன்புறுத்தக்கூடாது என்ற முதல்வர் நாராயணசாமி அபராதம் விதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories