அரசியல்

“இனியும் தரங்கெட்டு செயல்பட்டால் ராஜேந்திரபாலாஜி அரசியல் செய்யமுடியாது” - தி.மு.க எம்.எல்.ஏக்கள் காட்டம்!

ராஜேந்திரபாலாஜி நாவை அடக்கவேண்டும் இல்லையெனில் ஜனநாயக முறைப்படி தி.மு.க அவர் நாவை அடக்கும்.

“இனியும் தரங்கெட்டு செயல்பட்டால் ராஜேந்திரபாலாஜி அரசியல் செய்யமுடியாது” - தி.மு.க எம்.எல்.ஏக்கள் காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை நந்தனத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த நிலையில், விருதுநகரில் தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், “தி.மு.க தலைவரை தரங்கெட்ட வகையில் பேசினால் எடப்பாடி பழனிசாமி பாராட்டுவார் என நினைத்து ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார்.

ஜெயலலிதா இருக்கும்போதே அ.தி.மு.க அமைச்சர்கள் ஜெயலலிதாவின் காலை மட்டுமல்ல அவருடைய கார் டயரையும் நக்கிப் பிழைத்தார்கள். தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் காலை நக்கிப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன்னைப் பற்றி பத்திரிகையில் எழுதியதால் பத்திரிகையாளரின் பல்லை உடைத்து மருத்துவமனைக்கு அனுப்பியவர்தான் இந்த ராஜேந்திர பாலாஜி.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் எந்த மூலை முடுக்கிற்கும் சென்று மக்களைச் சந்திப்பார். ஆனால் துணைக்கு ஆள் இல்லாமல் ராஜேந்திர பாலாஜி செல்லமுடியுமா?

9 ஆண்டுகாலமாக அ.தி.மு.கவினர் தமிழ்நாட்டை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க தலைவர் சொன்னதில் என்ன தவறு? தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதலில் சிறைசெல்லும் அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருப்பார்.

தரங்கெட்ட அரசியல் செய்வதை ராஜேந்திரபாலாஜி நிறுத்தவேண்டும். இல்லையெனில் அவரால் இனி விருதுநகர் மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.

“இனியும் தரங்கெட்டு செயல்பட்டால் ராஜேந்திரபாலாஜி அரசியல் செய்யமுடியாது” - தி.மு.க எம்.எல்.ஏக்கள் காட்டம்!

விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு பேசும்போது, “தேவர் சமுதாயத்தை தி.மு.க தலைவர் அவமதித்ததாக கூறும் ராஜேந்திர பாலாஜி தன் சொந்தக் கட்சியைச் சார்ந்த தேவர் சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏவை மிரட்டுகிறார்

ராஜேந்திர பாலாஜிக்கு ஆண்மை இருந்தால் தி.மு.க தலைவரின் குற்றச்சாட்டிற்கு எதிராக வழக்கு போட்டிருக்க வேண்டும். ராஜேந்திரபாலாஜி நாவை அடக்கவேண்டும் இல்லையெனில் ஜனநாயக முறைப்படி தி.மு.க அவர் நாவை அடக்கும்.

இந்திரா காந்திக்கே கருப்புக்கொடி காட்டியது தி.மு.க. ராஜேந்திர பாலாஜி எம்மாத்திரம். எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களை அடக்கிவைக்க வேண்டும். இல்லையெனில் தி.மு.க திருப்பி அடிக்கும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories