அரசியல்

“கொரோனாவை விட ‘யார் சிறந்த அடிமை’ எனும் போட்டிதான் அ.தி.மு.கவுக்கு முக்கியம்” - உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!

‘இன்னொரு கூவத்தூருக்கோ, தர்மயுத்தத்துக்கோ யாரும் தயாரில்லை. மிச்சமிருக்கும் மாதத்தையும் கமிஷன் கலெக்ஷன்னு ஓட்டிடுவோம்.’ இப்படியாக பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது.

“கொரோனாவை விட ‘யார் சிறந்த அடிமை’ எனும் போட்டிதான் அ.தி.மு.கவுக்கு முக்கியம்” - உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

கூவத்தூரில் உருவான முதல்வர் பழனிசாமிக்கும், தர்மயுத்தம் பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான அதிகார மோதல் கட்சியினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பேரிடரில் தமிழக மக்கள் சிக்கித் தவித்துவரும் நிலையில், கட்சி மோதல்களிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர் அ.தி.மு.க அமைச்சர்கள். முதல்வருக்கும் துணை முதல்வருக்குமிடையே தூது செல்வதையே முழுநேர வேலையாகக் கொண்டு செயல்படுகிறது அ.தி.மு.க அமைச்சரவை.

“கொரோனாவை விட ‘யார் சிறந்த அடிமை’ எனும் போட்டிதான் அ.தி.மு.கவுக்கு முக்கியம்” - உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!

இந்நிலையில், அ.தி.மு.கவில் நிலவி வரும் குழப்பங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,“ ‘வேளாண் மசோதா, எட்டு வழிச்சாலை, ஸ்டைர்லைட் துப்பாக்கிச் சூடு, நீட் விலக்கு நாடகம்... இப்படி இந்த ஆட்சியை தக்கவைக்க நான்தான் அதிகம் உழைக்கிறேன்’- இது ஒருவர். ‘குடியுரிமை திருத்தச்சட்டம், இந்தி திணிப்பு. இருந்தும் ஆட்சிக்காக அவரைவிட நானே சிறந்த அடிமையாக இருக்கிறேன்’- இது இன்னொருவர்.

அடிமைகள் தூது நடக்கிறது. ‘நீங்க அவர்னு இல்லை. நாம எல்லாருமே அடிமை என்பதால்தான் ஆட்சி ஓடிட்டு இருக்கு. சேகர் ரெட்டி, கன்டெயினர் லாரி, குட்கா டைரி, ஆர்.கே நகர் ரெய்டு, பொள்ளாச்சி கேஸ், கொடநாடு கொலை, பி.எம். கிசான் ஊழல்... பதிலுக்கு இப்படி அவர்களும் அன்பளிப்பு அளிக்கிறார்கள்.

‘இன்னொரு கூவத்தூருக்கோ, தர்மயுத்தத்துக்கோ யாரும் தயாரில்லை. மிச்சமிருக்கும் மாதத்தையும் கமிஷன் கலெக்ஷன்னு ஓட்டிடுவோம்.’ இப்படியாக பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. இதில் கொரோனாதான் பாவம். கடந்த சில நாட்களாக அது மக்களை தீண்டும் வேகம் அதிகரித்தாலும் அதை சீண்டத்தான் யாருமில்லை.” என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories