அரசியல்

#TNStandwithsurya சூர்யாவுக்கு டிவிட்டரில் குவியும் ஆதரவு!

நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்துக்கு டிவிட்டரில் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் நீட் தேர்வு தரும் அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து வருகிறது. அரியலூர் மாணவி அனிதா தொடங்கி இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். செப்டம்பர் 12-ம் தேதி ( 2020 நீட் தேர்வுக்கு முந்தைய நாள்) மட்டும் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்த வகையில் நீட் தேர்வுக்கு எதிரான தனது குரலை வலுவாக பதிவு செய்திருந்தார், நடிகர் சூர்யா. " நீட் என்னும் மனு நீதி தேர்வு மாணவர்களின் உயிரை பறிக்கின்றது" என அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “உயிருக்கு பயந்து காணொலி காட்சி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றங்கள் கூட மாணவர்களை அசப்படாமல் தேர்வெழுத சொல்கிறது” என்று தனது ஆதங்கத்தை பதிவு செய்திருந்தார்.

#TNStandwithsurya சூர்யாவுக்கு டிவிட்டரில் குவியும் ஆதரவு!

சூர்யாவின் இந்த கருத்து நீதிமன்ற அவமதிப்பு என்றும், அவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி பிரதாப் சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், சூர்யா கூறிய கருத்தில் நியாயமான சமூக கோபமே உள்ளது என பொதுமக்களும், சூர்யா ரசிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் டிவிட்டரில் #TNStandwithsurya மற்றும் #நீட்என்ற_மனுநீதிதேர்வு ஹேஷ்டேக்கில் தங்கள் ஆதரவை பதிவு செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories