அரசியல்

’ரசிகர்களின் பணம் மட்டும் போதும் என எண்ணாதீர்கள்’: ரஜினி விதிவிலக்கு கேட்டது குறித்து வேல்முருகன் கருத்து

ரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் கூறி, தூத்துக்குடி விசாரணை ஆணையத்தில் ஆஜராக ரஜினிகாந்த் விதிவிலக்கு கேட்பது அபத்தமானது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். 

’ரசிகர்களின் பணம் மட்டும் போதும் என எண்ணாதீர்கள்’: ரஜினி விதிவிலக்கு கேட்டது குறித்து வேல்முருகன் கருத்து
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு விடுக்கப்பட்ட சம்மனுக்கு, நேரில் ஆஜரானால் ரசிகர்கள் கூடுவார்கள், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதைக் காரணம் காட்டி விதிவிலக்கு கேட்டிருந்தார்.

ரஜினிகாந்தின் இந்த செயலுக்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், ரஜினியின் இந்த பதில் ரசிகர்களை அவமானம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், செய்தியாளர்களை சந்தித்தார். உள்ளாட்சித் தேர்தலில் வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கு வாய்ப்பளித்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார்.

’ரசிகர்களின் பணம் மட்டும் போதும் என எண்ணாதீர்கள்’: ரஜினி விதிவிலக்கு கேட்டது குறித்து வேல்முருகன் கருத்து

தொடர்ந்து பேசிய அவர், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெற்ற அமோக வெற்றி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். அதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி தி.மு.க கூட்டணியை ஆதரிக்கும் என்றார்.

தமிழகத்தில் உள்ள அரசு பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும். ஆனால், TNPSC மூலம் தேர்வெழுதினால் நியாயமான முறையில் அரசு வேலை கிடைக்குமா என்ற அச்சம் நிலவுகிறது என்றுக் கூறிய வேல்முருகன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தில் ரசிகர்களை காரணம்காட்டி ரஜினிகாந்த் விதிவிலக்கு அபத்தமானது என குறிப்பிட்டார். மேலும், நான் வந்தால் ரசிகர்கள் கூடிவிடுவார்கள் எனச் சொல்லி பின்வாங்குவது ஏற்புடையது அல்ல.

ஏனெனில், இதே தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்கள்தான் ரஜினியின் படம் வெளிவரும் போது 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை டிக்கெட்டை வாங்கி, பாலபிஷேகம் செய்து ஆராதிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ரசிகர்கள் மூலம் கிடைக்கும் பணம் மட்டும் வேண்டும், ஆனால் வழக்கு விசாரணை ஆஜராகும் போது ரசிகர்கள் கூடினால் தொந்தரவாக இருக்கும் எனக் கூறுவது அவர்களை அவமதிக்கும் செயல் என ரஜினிகாந்துக்கு வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories