அரசியல்

“பாவி மீதும் அன்பு செலுத்துங்கள்” - காங்கிரஸ் வெளியிட்ட Hug Day வீடியோ!

‘Hug Day'வை முன்னிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு பா.ஜ.கவை விமர்சித்துள்ளது காங்கிரஸ் கட்சி.

“பாவி மீதும் அன்பு செலுத்துங்கள்” - காங்கிரஸ் வெளியிட்ட Hug Day வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காதலர் தினத்தையொட்டி இந்த வாரம் முழுக்க தினசரி ஒரு பிரத்யேக தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று Hug day எனப்படும் கட்டிப்பிடி தினத்தையொட்டி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கட்டியணைக்கும் வீடியோவை வெளியிட்டு பா.ஜ.கவை சீண்டியுள்ளது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்.

அதில், “இந்த நாள் மட்டுமல்ல; ஒவ்வொரு நாளும் பா.ஜ.கவுக்கு அதே செய்திதான். கட்டிப்பிடிப்பதை வெறுக்கவேண்டாம்” என காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.

மேலும், தேசப்பிதா மகாத்மா காந்தியின் சொற்றொடர்களையும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. “பாவங்களை வெறுங்கள்; பாவி மீதும் அன்பு செலுத்துங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மகாத்மா காந்தியின் “ஒரு கோழையால் அன்பை வெளிப்படுத்த முடியாது; அது துணிச்சலானவர்களின் தனிச்சிறப்பு” எனும் கருத்தையும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

மேலும், ராகுல் காந்தியின் பேச்சும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. பா.ஜ.கவையும், மோடியையும் சீண்டும் விதமாக காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ள இந்த வீடியோ பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories