அரசியல்

நாடாளுமன்றத்தில் நாலாந்தரப் பேச்சாளர் போலப் பேசும் மோடியின் டியூப்லைட் தருணங்கள்!

மோடி ட்யூப்லைட் ஆன நிகழ்வுகள் ஏராளம் இருக்கும்போது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரை ட்யூப்லைட் எனக் கூறலாமா?

நாடாளுமன்றத்தில் நாலாந்தரப் பேச்சாளர் போலப் பேசும் மோடியின் டியூப்லைட் தருணங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மோடி நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பேசிவிட்டு எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுகிறார். அப்போது ராகுல்காந்தி எழுந்து வேலைவாய்ப்பின்மையைப் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள் என்று கேட்டபோது, சிலர் இன்னும் ட்யூப்லைட்டாகவே இருக்கிறார்கள் என்று ஒரு நாலாந்தரப் பேச்சாளரை போல பேசுகிறார் பிரதமர் மோடி. ராகுல்காந்தியை நோக்கி ட்யூப்லைட் என்றுரைத்த மோடிக்கு சில விஷயங்களை நினைவுபடுத்த வேண்டிய கடமை இருக்கிறது.

1. வெளிநாட்டில் உள்ள அனைத்துக் கறுப்புப் பணத்தையும் மீட்டுக் கொண்டு வருவோம் என்று சொல்லிவிட்டு சொந்த மக்களை தெருவில் ஏ.டி.எம் வாசலில் நிற்க வைத்த மோடி யார்?

2. இ-மெயிலும், டிஜிட்டல் கேமராவும் இந்தியாவுக்கு அறிமுகமாவதற்கு முன்பே அதனை இந்தியாவில் பயன்படுத்தினேன் என்று கூறிய மோடி யார்?

3. காங்கிரஸ் ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமில்லை; பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் தூணாகும் என்று 2014க்கு முன்பு சொல்லிவிட்டு பத்திரிகையாளர்களையே சந்திக்காத பிரதமராக இருக்கும் மோடி யார்?

நாடாளுமன்றத்தில் நாலாந்தரப் பேச்சாளர் போலப் பேசும் மோடியின் டியூப்லைட் தருணங்கள்!

4. டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவோம் எனச் சொல்லிட்டு காஷ்மீரில் 181 நாட்களாக இணையத்தை முடக்கி வைத்திருக்கும் மோடி யார்?

5. பக்கோடா விற்பது கூட வேலைவாய்ப்புதான் எனச் சொல்லும் அமித்ஷாக்களையும், வெங்காயம் விலை ஏறும் போது அது பற்றி எனக்கு தெரியாது என சொல்லும் பூண்டு, வெங்காயம் சாப்பிடாதயும் நிதியமைச்சரை அமைச்சரவையில் வைத்திருக்கும் மோடி யார்?

6. மேகங்கள் சூழ்ந்துள்ள போது ரேடாரின் உதவியால் பாகிஸ்தானை தாக்கினோம் என்று சொன்ன விஞ்ஞானி மோடி யார்?

7. சொந்த நாட்டின் ஒரு பகுதி மக்களே ‘Go Back Modi’ என்று சொல்லும்போது அமெரிக்காவுக்கு சென்று ட்ரம்புக்கு வாக்கு கேட்ட மோடி யார்?

8. வட் நகருக்கு ரயில் தடம் வருவதற்கு முன்பே அங்கு வரும் ரயில்களில் டீ விற்ற மோடி யார்?

நாடாளுமன்றத்தில் நாலாந்தரப் பேச்சாளர் போலப் பேசும் மோடியின் டியூப்லைட் தருணங்கள்!

9. மீன்கள் அதிகம் இருக்கும் இடத்தை சாட்டிலைட் மூலம் கண்டறிந்து அது தொடர்பான தகவல் மீனவர்களின் செல்போன்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று சொன்ன மோடிக்கு ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கும் நவீனக் கருவிகள்கூட நம்மிடம் இல்லை என்பது தெரியவில்லை என்றால் இந்த மோடி யார்?

10. எல்லாரது வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் பணம் போடுவேன் என்று சொல்லிவிட்டு ஏர் இந்தியாவையும், எல்.ஐ.சியையும் தனியாருக்கு விற்று அரசு நடத்தும் இந்த மோடி யார்?

இப்படி மோடி ட்யூப்லைட் ஆன நிகழ்வுகள் ஏராளம் இருக்கும்போது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினரை ட்யூப்லைட் எனக் கூறலாமா?

banner

Related Stories

Related Stories