அரசியல்

“பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதற்கு தகுந்த விலை கொடுப்பார் ரஜினிகாந்த்” - கி.வீரமணி பேட்டி!

பெரியார் குறித்து அவமதிப்பு கருத்துகள் கூறியதற்கு நடிகர் ரஜினிகாந்த் தகுந்த விலையைக் கொடுப்பார் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

“பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதற்கு தகுந்த விலை கொடுப்பார் ரஜினிகாந்த்” - கி.வீரமணி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பெரியார் குறித்து அவமதிப்புக் கருத்துகள் கூறியதற்கு நடிகர் ரஜினிகாந்த் தகுந்த விலையைக் கொடுப்பார் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி பேசியதாவது :

"கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவ மாணவிகள் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேரக்கூடிய வாய்ப்பை தடுத்து நிறுத்தி பல அனிதாக்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சூழ்நிலையைக் கண்டும் கூட நீட் தேர்வை ஒழிக்கவேண்டும்; தமிழகத்திற்கு விதிவிலக்கு கொடுக்க வேண்டும் எண்ணம் மத்திய, மாநில அரசுகளுக்கு இல்லை.

தி.மு.க ஆட்சியிலும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியிலும் நீட் தேர்வுக்கு இடமில்லாமல் இருந்தது. அதற்கெல்லாம் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் நீட் தேர்வு தான் சிறந்தது என்று பிள்ளைகளின் படிப்பில் மண்ணைப் போட்டு தமிழ்நாட்டின் கிராமப்புற பிள்ளைகளை படிக்க முடியாத அளவுக்கு நீட் தேர்வில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. ஆள்மாறாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

“பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதற்கு தகுந்த விலை கொடுப்பார் ரஜினிகாந்த்” - கி.வீரமணி பேட்டி!

சாதாரண ஏழை எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் பங்குபெற முடியாத சூழல் உள்ளது. இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டிய தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஏற்கனவே மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசு அதைத் திருப்பி அனுப்பியதற்குக் கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் நீட் தேர்வு விஷயத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது.

கல்வி முறையில் 5, 8, 9ம் வகுப்புகளுக்கு தனித்தனி தேர்வுகள் எழுதவேண்டும் என்று சொல்லி பிள்ளைகளின் படிப்பில் மண்ணைப் போடுகின்ற அளவிற்கு உள்ளது. பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் அரும்பாடுபட்டு உருவாக்கிய ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்றிருந்த நிலை தற்போது குலக்கல்வி திட்டத்தை கொண்டு வரக்கூடிய அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு தழுவிய பிரச்சாரத்தை கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி வரை தொடர்ந்து 10 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறோம். இன்று மாலை நாகர்கோவிலில் பிரச்சாரம் தொடங்கி ஜனவரி 30ஆம் தேதியன்று சென்னையில் நிறைவுபெறுகிறது” எனத் தெரிவித்தார்.

“பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதற்கு தகுந்த விலை கொடுப்பார் ரஜினிகாந்த்” - கி.வீரமணி பேட்டி!

பெரியார் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவிக்காதது குறித்துக் கேட்டதற்கு, அதற்குத் தகுந்த விலையை அவர் கொடுப்பார் என்றும், தவறான தகவலை தெரிவித்து மற்றவர் சுட்டிக்காட்டும்போது அதை திருத்திக் கொள்வதுதான் சரி என்றும் தெரிவித்தார்.

மேலும், “ரஜினி இனிமேல் அரசியலுக்கு வந்தால் அவர் பேசுவது எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வின்போது அவர் நிலை என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது” என்றும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories