அரசியல்

“உங்கள் அரசியல் வாழ்வில் இது தலைகுனிவு” - ராமதாஸ் கருத்துக்கு தி.மு.க எம்.பி விமர்சனம்!

கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமை மசோதாவுக்கு வாக்களித்தோம் என ராமதாஸ் கூறியதை தி.மு.க எம்.பி செந்தில்குமார் விமர்சித்துள்ளார்.

“உங்கள் அரசியல் வாழ்வில் இது தலைகுனிவு” - ராமதாஸ் கருத்துக்கு தி.மு.க எம்.பி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிறுபான்மையினரையும், இலங்கைத் தமிழர்களையும் புறக்கணிக்கும் பா.ஜ.கவின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு தி.மு.க எம்.பிக்கள் எதிராக வாக்களித்துள்ள நிலையில் அ.தி.மு.க எம்.பிக்கள் ஆதரவளித்து வாக்களித்தது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும், தமிழக நலன், சிறுபான்மையினர் நலன் என மேடைக்கு மேடை பேசிவரும் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ம.கவின் எம்.பியான அன்புமணி ராமதாஸும் இதற்கு ஆதரவளித்துள்ளார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், “கூட்டணி தர்மத்துக்காகதான் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவளித்துள்ளோம்” என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இவரது பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இதற்கிடையில் பப்ஜி விளையாட்டால் மத்திய பிரதேச இளைஞர் தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்தது தொடர்பாக ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவரது ட்வீட்டுக்கு கீழே “குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவளித்து வாக்களித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். இது என்ன மாதிரியான அரசியல் விளையாட்டு என தெரிவித்தால் உங்களுடைய சுயநலம் குறித்து மக்கள் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்” என தி.மு.க தருமபுரி எம்.பி செந்தில்குமார் பதிவிட்டிருந்தார். இதற்கு பா.ம.கவை விமர்சித்து பலர் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், கூட்டணி தர்மம் குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசிய வீடியோவை பகிர்ந்து அதில் “கொள்கை எனக் கூறிவிட்டு கூட்டணி அதர்மத்திற்கு என்ன என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்” என ராமதாஸை விமர்சித்து மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தி.மு.க எம்பி செந்தில்குமார்.

banner

Related Stories

Related Stories