அரசியல்

''உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தமிழக அரசு சதி செய்கிறது'' - முத்தரசன் குற்றச்சாட்டு!

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை வேலைகளையும் அ.தி.மு.க அரசு தெளிவாகச் செய்து கொண்டிருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

''உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தமிழக அரசு சதி செய்கிறது'' - முத்தரசன் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''அரசால் குடிமராமத்து திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் 1000 கோடியில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீரை வெளியேற்றி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை வேலைகளையும் அதிமுக அரசு தெளிவாகச் செய்து கொண்டிருக்கிறது.

மாவட்டங்களைப் பிரித்ததற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று முதல்வர் கூறுவது மோசடித்தனமானது. உள்ளாட்சி தேர்தலை நிறுத்த எடப்பாடி அரசு சதி செய்கிறது.

மத்திய அரசிடம் வலியுறுத்தி தமிழ்நாட்டிற்கு மருத்துவக் கல்லூரிகளை பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறாவிட்டால் இந்த மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றதே பயனில்லாமல் போய்விடும்'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories