அரசியல்

மராட்டியத்தில் மண்ணைக் கவ்விய பா.ஜ.க - அஜித் மனதை மாற்றிய சரத் பவார் : 80 மணி நேரத்தில் என்ன நடந்தது ?

அசுர பலத்தில் உள்ள மோடி- அமித்ஷாவை வீழ்த்தி நாட்டையே மகாராஷ்ட்ராவை நோக்கி பார்க்க வைத்து இருக்கிறார் சரத் பவார்.

மராட்டியத்தில் மண்ணைக் கவ்விய பா.ஜ.க - அஜித் மனதை மாற்றிய சரத் பவார் : 80 மணி நேரத்தில் என்ன நடந்தது ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

'நான் இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்று சட்டசபைக்குள் வருவேன்' என்று தேர்தலுக்கு முந்தைய இறுதி சட்டமன்ற கூட்டத் தொடரில் தேவேந்திர பட்னாவிஸ் பேசியிருந்தார். ஆனால் இரண்டாவது முறையாக முதல்வர் பதிவு ஏற்று 80 மணி நேரத்தில் ராஜினாமா செய்து இருக்கிறார் அதே பட்னாவிஸ்!

மராட்டியத்தில் கடந்த மாதம் 21ம் தேதி 288 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில் 24ம் தேதி முடிவுகள் வெளியாகின. ஆனால் ஒரு மாத காலமாகியும் யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவிவந்தது. இந்த நிலையில் திடீரென கடந்த சனிக்கிழமை 23ம் தேதி காலை 8 மணி அளவில் முதல்வராக தேவேந்திர பாட்னாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் ராஜ்பவனில் பதவி ஏற்றனர்.

மராட்டியத்தில் மண்ணைக் கவ்விய பா.ஜ.க - அஜித் மனதை மாற்றிய சரத் பவார் : 80 மணி நேரத்தில் என்ன நடந்தது ?

அதன் பின்னர் மராட்டிய அரசியல் எப்போதும் இல்லாத அளவிற்கு அனைவராலும் உற்று நோக்கப்பட்டது. இதில் குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவாரின் நிழலாக இருந்த அஜித் பவார் பின்னால் எத்தனை எம்‌.எல்‌.ஏ.,க்கள் உடன் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. அஜித் பவாருடன் சென்ற 12 எம்‌.எல்‌.ஏக்கள் ஒருவர் பின் ஒருவராக சரத் பவாரிடம் வந்தடைந்தார்.

பா.ஜ.க தரப்பு தங்களிடம் பெரும்பான்மை எம்‌.எல்‌.ஏக்கள் இருப்பதாக தொடர்ந்து கூறிவந்த நிலையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றம் சென்றனர்.

மராட்டியத்தில் மண்ணைக் கவ்விய பா.ஜ.க - அஜித் மனதை மாற்றிய சரத் பவார் : 80 மணி நேரத்தில் என்ன நடந்தது ?

முன்னதாக 25ம் தேதி நேற்று மாலை யாரும் எதிர்பார்க்காத நிலையில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தங்களிடமே பெரும்பான்மையான எம்‌.எல்‌.ஏக்கள் இருப்பதை காட்டும் விதமாக 162 எம்‌.எல்‌.ஏக்கள் பங்கேற்ற எம்‌.எல்‌.ஏ அணிவகுப்பை ஊடகங்கள் முன்னிலையில் நட்சத்திர விடுதியில் நடத்திக்காட்டினர்.

பட்னாவிஸ் தனது ஆட்சியின் பெரும்பான்மையை நாளை மாலை 5 மணிக்குள் நிரூபிக்க வேண்டும் எனவும், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதற்கான வேலைகள் தொடங்கி இருந்த நிலையில் பட்னாவிஸ் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

மராட்டியத்தில் மண்ணைக் கவ்விய பா.ஜ.க - அஜித் மனதை மாற்றிய சரத் பவார் : 80 மணி நேரத்தில் என்ன நடந்தது ?

அதற்கு முன்னரே துணை முதல்வரான அஜீத் பவார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 3.30 மணிக்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பட்னாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மராட்டியத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்று 4 நாட்களில் அதாவது 80 மணி நேரத்தில் பாட்னாவிஸ் தலைமையிலான அரசு முடிவுக்கு வந்து இருக்கிறது.

இதற்கு முன்னதாக 1998ம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் ஜக்டாம்பிக்கா பால் ஆட்சி 44 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. 2018ம் ஆண்டு கர்நாடகாவில் எடியூரப்பா அரசு 55 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது குறிப்பிடதக்கது.

உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக வழக்கில் தீர்ப்பு வெளியான பின்னர் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் பட்னாவிஸ் அரசை முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறது.

மராட்டியத்தில் மண்ணைக் கவ்விய பா.ஜ.க - அஜித் மனதை மாற்றிய சரத் பவார் : 80 மணி நேரத்தில் என்ன நடந்தது ?

இந்திய அரசியலமைப்பு சட்ட உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதன் கொண்டாட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்தது.

அந்த நிகழ்வு முடிந்த பின்னர் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி நாளை பெரும்பான்மையை நிரூபிக்காலமா அல்லது ராஜினாமா செய்ய சொல்லலாமா என்று விவாதித்து இருக்கிறார்கள். அதன் பின்னர் ராஜினாமா செய்ய சொல்லி டெல்லியிருந்து மும்பைக்கு உத்தரவு பறந்திருக்கிறது.

இரண்டாவது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு சரத் பவார் அஜித் பவாருக்கு தொடர்பு கொண்டு திரும்பி வருமாறு அழைப்பு விடுத்தாகவும் பா.ஜ.க உன்னை ஏமாற்றி இருக்கிறது நீ திரும்பி வந்தால் அனைவரும் மன்னித்து விடுவார்கள் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின.

மராட்டியத்தில் மண்ணைக் கவ்விய பா.ஜ.க - அஜித் மனதை மாற்றிய சரத் பவார் : 80 மணி நேரத்தில் என்ன நடந்தது ?

மகாராஷ்டிரா மற்ற மாநிலங்களை போல எம்‌.எல்‌.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க முடியாது என்று பா.ஜ.க.வுக்கு மூன்று கட்சிகள் காட்டி இருக்கிறது.

தனது 50 ஆண்டு கால அரசியல் முக்கியமான காலகட்டதில் உள்ள சரத் பவார், அசுர பலத்தில் இருக்கும் மோடி- அமித்ஷாவை வீழ்த்தி நாட்டையே மகாராஷ்டிராவை நோக்கி பார்க்க வைத்து இருக்கிறார்.

- சி.ஜீவா பாரதி

banner

Related Stories

Related Stories