அரசியல்

''2021ல் தற்போதுள்ள அ.தி.மு.க அரசு அகற்றப்படக்கூடிய அதிசயம் நிகழும்'' - முத்தரசன் பேட்டி!

இந்தியா வரும் கோத்தபய ராஜபக்சேவிடம் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

''2021ல் தற்போதுள்ள அ.தி.மு.க அரசு அகற்றப்படக்கூடிய அதிசயம் நிகழும்'' - முத்தரசன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''மேயர்,உள்ளாட்சி, பேரூராட்சி தேர்தலில் தலைவர்களுக்கு மறைமுகத் தேர்தல் என்று அறிவித்திருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை.

ஆட்சி அதிகாரம் பணபலம், படைபலம் ஆகியவற்றைக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி எப்படி வெற்றி பெற்றதோ, அதே போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அந்தக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். ரஜினிகாந்த் கூறியது போல 2021ல் அதிசயம் நிகழும். தற்போது உள்ள அ.தி.மு.க அரசு அகற்றப்படக்கூடிய அதிசயம் நிகழும்.

இலங்கையில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே இந்தியா வரும்போது இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை சுட்டிக்காட்டி இது போன்று இனி நடக்காத வண்ணம் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories