அரசியல்

''பல அனிதாக்களை உருவாக்கும் அவரின் குடும்பத்தாரின் லட்சியம் நிறைவேறட்டும்'' - உதயநிதி ஸ்டாலின்

அரியலூா் மாவட்டம், குழுழூரில் உள்ள அனிதா நூலகத்துக்கு வருகை தந்த தி.மு.க இளைஞா் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் புத்தகங்களை வழங்கி, நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டாா்.

''பல அனிதாக்களை உருவாக்கும் அவரின் குடும்பத்தாரின் லட்சியம் நிறைவேறட்டும்'' - உதயநிதி ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதா இல்லத்திற்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகைபுரிந்தார். அங்கு அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அனிதா நினைவு நூலகத்திற்கு 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கி நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டாா். முன்னதாக நூலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து, அனிதா திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடரந்து செய்தியாளர்களிடையே பேசிய அவர் தனக்கு வழங்கிய புத்தகங்களை அனிதா நூலகத்திற்கு வழங்கி நூலக உறுப்பினராக பதிவுசெய்ததில் பெருமிதம் கொண்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், பா.ஜ.க -அ.தி.மு.க அரசுகள் புகுத்திய நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட தங்கை அனிதாவின் நினைவாக அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்துக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுத்துத்தந்த நூல்களை வழங்கினேன். இவை, என்னை சந்திக்கவரும் இளைஞரணியினர் வழங்கிய புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது'' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தலையைத் தட்டும் தாழ்வான ஓட்டு வீடு. இன்றும் அப்படியே உள்ளது அனிதாவின் வீடு. அதன் அருகிலேயே நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள அவரின் பெயரிலான நூலகம். அனிதாவின் லட்சியம்தான் நிறைவேறவில்லை.

பல அனிதாக்களை உருவாக்கும் அவரின் குடும்பத்தாரின் லட்சியம் நிறைவேறட்டும் .நானும் துணை நிற்பேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories