அரசியல்

“எடப்பாடி பழனிசாமியே செங்கோட்டையன் மூலம் கொலை வழக்கிலிருந்து தப்பித்தவர்” - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!

எடப்பாடி பழனிசாமி கொலை வழக்கிலிருந்து அ.தி.மு.க ஆட்சியால் தப்பித்து வந்தவர் எனும் தகவலை வெளியிட்டுள்ளார் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

“எடப்பாடி பழனிசாமியே செங்கோட்டையன் மூலம் கொலை வழக்கிலிருந்து தப்பித்தவர்” - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொலை வழக்கிலிருந்து அ.தி.மு.க ஆட்சியால் தப்பித்து வந்தவர் எனக் குற்றம்சாட்டியுள்ளார் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

சமீபத்தில், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எடப்பாடி பழனிசாமி குறித்த பகீர் தகவலை வெளியிட்டார்.

அதுகுறித்துப் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் தன் சகோதரர் சம்பந்தப்பட்ட கொலை வழக்கில் ஆயுள் கைதி ஆகவேண்டியவர். விசாரணையில் சாட்சிகள் பிறழ் சாட்சிகளானதால் விடுதலை செய்யப்பட்டார்.

அ.தி.மு.க ஆட்சிக் காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அந்தக் கொலை வழக்கிலிருந்து வெளிவர உதவியவர் செங்கோட்டையன். கொலைக் குற்றவாளிதான் தற்போது தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வரும் கருத்துகள், அவர் மீதான குற்ற வழக்குகளையும், உண்மை நிகழ்வுகளையும் மக்கள் மத்தியில் விளக்கவேண்டிய கட்டாயத்தை தற்போது ஏற்படுத்தி இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories