அரசியல்

“திருவள்ளுவர் சர்ச்சை திட்டமிட்டது; பா.ஜ.க செய்தது தற்செயலானது” - முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய ரஜினி!

திருவள்ளுவர் சர்ச்சை விவகாரத்தில் ரஜினிகாந்த், சில மணி நேரங்களிலேயே மாற்றிப் பேசியியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

“திருவள்ளுவர் சர்ச்சை திட்டமிட்டது; பா.ஜ.க செய்தது தற்செயலானது” - முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய ரஜினி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“காவி நிறம் பூசும் வேலையில் திருவள்ளுவரும் மாட்டமாட்டார் நானும் மாட்டமாட்டேன் எனத் தெரிவித்த ரஜினிகாந்த், சில மணி நேரங்களிலேயே திருவள்ளுவருக்கு பா.ஜ.க காவி உடை தரித்தது தற்செயலானது” எனத் தெரிவித்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருவள்ளுவர் ஒரு ஞானி. அவரை ஜாதி, மதத்திற்குள் அடைக்கமுடியாது. அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர்.

பா.ஜ.க-வினர் அவர்களது அலுவலகத்திலும் ட்விட்டர் பக்கத்திலும் திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசியது அவர்களது தனிப்பட்ட விவகாரம். அதையே தமிழகம் முழுவதும் பின்பற்ற வேண்டும் என நினைக்கக்கூடாது. அதைவிட மிகப்பெரிய பிரச்னைகள் நாட்டில் உள்ளன. அதை விடுத்து இதை ஒரு சர்ச்சையாக்கி விவாதிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசுவது போல எனக்கும் காவி பூசப் பார்க்கிறார்கள். திருவள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்ட மாட்டேன்” எனத் தெரிவித்தார்.

பின்னர், சில மணி நேரங்களுக்குப் பிறகு, மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “திருவள்ளுவர் மீது காவி நிறம் பூசும் வேலை திட்டமிட்டு நடக்கவில்லை. திருவள்ளுவருக்கு பா.ஜ.க காவி உடை தரித்தது தற்செயலானது.” என முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் எப்போதுமே எந்த தரப்பின் மனமும் புண்படாதபடி பேச முயற்சித்து வருகிறார். ஒரு கருத்தை ஒரு தரப்புக்கு ஆதரவாகச் சொன்னால், பின்னர் அதையே மாற்றி எதிர்தரப்பு மகிழும்படி பேசிவிடுகிறார். ரஜினியின் இந்த முரண்பட்ட பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

அந்தவகையில், திருவள்ளுவர் மீதான காவி நிற சர்ச்சையிலும் ரஜினி முரண்பட்ட கருத்துகளை தெரிவித்திருப்பது விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories