அரசியல்

“துரோகம் செய்தது பா.ஜ.கவா? சிவசேனாவா?” - உச்சகட்டத்தில் மகாராஷ்டிர மாநில அதிகார மோதல்!

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பா.ஜ.க-வின் மிரட்டலுக்கு மாநில கட்சியான சிவசேனா பயந்து ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் என்ற அவர்களின் நினைப்பு தவிடுபொடியாகிவிட்டது.

“துரோகம் செய்தது பா.ஜ.கவா? சிவசேனாவா?” - உச்சகட்டத்தில் மகாராஷ்டிர மாநில அதிகார மோதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்; அதிகாரத்தைக் கைப்பற்ற எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அரசியல்வாதிகள் செல்வார்கள்; அதிகாரம் கையில் இருந்தால் எதையும் செய்வார்கள் என்பதற்கு சிறப்பான உதாரணம் மோடி-அமித்ஷா தலைமையிலான பா.ஜ.க. அதே பா.ஜ.கவைத்தான் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கவிடாமல் தங்களுக்கே உரித்தான பாணியில் சிவசேனா அரசியல் ஆட்டம் காட்டி வருகிறது.

மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் பா.ஜ.க-வால் ஆட்சி அமைக்க முடியாமல் தனியாக நிற்கிறது. 2014ல் முறிந்த பா.ஜ.க- சிவசேனா கூட்டணி, மீண்டும் இணைந்து இந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க உடன் கூட்டணியில் இருந்தாலும் கடைசி வரை தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் வேட்பாளர் என்று சிவசேனா பிரச்சாரம் செய்யவே இல்லை. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எப்போதும் போல பா.ஜ.க-வின் மிரட்டலுக்கு மாநில கட்சியான சிவசேனா பயந்து ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும் என்ற நினைப்பு எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது.

“துரோகம் செய்தது பா.ஜ.கவா? சிவசேனாவா?” - உச்சகட்டத்தில் மகாராஷ்டிர மாநில அதிகார மோதல்!

தேர்தல் முடிவுகள் வெளியானது தொடங்கி தங்களின் கூட்டணி கட்சியான பா.ஜ.கவுடன் 50:50 அதிகாரப் பகிர்வு என்பதில் சிவசேனா உறுதியாக இருந்தது. அதில் குறிப்பாக முதல்வர் பதவி தங்களுக்குத் தான் என்பதில் சிவசேனா உறுதியாக இருக்கவே பா.ஜ.க முதல்வர் பதவியை விட்டுத் தர தயாராக இல்லை. பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ் உடன் கூட்டணியிலிருந்த தேசியவாத காங்கிரஸ் உடன் சிவசேனா புதிய கூட்டணி ஆட்சி அமைக்கவும் வேலையைத் தொடங்கியது.

சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் தலைமை அதற்கு தயாராக இல்லை என்று தெரிந்தபின்னர் அந்த முடிவும் கைவிடப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் புதிய கூட்டணியை அமைக்க பல்வேறு முயற்கள் மேற்கொண்டாலும் எதுவும் அடுத்தக் கட்டத்திற்குச் செல்லவில்லை. இதில் உத்தவ்தாக்ரே நேரடியாக களத்தில் இறங்காமல் தங்களின் நம்பிக்கைக்குரிய சஞ்சய் ராவத்தை புதிய கூட்டணியில் அமைப்பதிலும், பா.ஜ.கவுக்கு பதிலடி அளிக்கவும் சிவசேனா பயன்படுத்தியது.

“துரோகம் செய்தது பா.ஜ.கவா? சிவசேனாவா?” - உச்சகட்டத்தில் மகாராஷ்டிர மாநில அதிகார மோதல்!

இந்த நிலையில் பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க அரசின் பதவிக்காலம் இன்று இரவோடு முடிவடையும் நிலையில் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யரிடம் அளித்தார். 15 நாட்களாக ஊடகங்கள் மத்தியில் பேசாத பட்னாவிஸ் மற்றும் உத்தவ் தாக்ரே இருவரும் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

தேவேந்திர பட்னாவிஸ் சிவசேனாவை கடுமையாகத் தாக்கினார். குறிப்பாக "கடந்த காலத்தில் சிவசேனா எங்களை பலமுறை அவமதித்து இருக்கிறது. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் வழங்குவது குறித்து எந்த வகையிலும் பேசவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு 100% காரணம் சிவசேனா மட்டும் தான். உத்தவ் தாக்ரே உடனான நட்பு தொடர்கிறது. நான் பலமுறை உத்தவ் தாக்கரே உடன் பேச முயற்சி செய்தேன்.

“துரோகம் செய்தது பா.ஜ.கவா? சிவசேனாவா?” - உச்சகட்டத்தில் மகாராஷ்டிர மாநில அதிகார மோதல்!

ஆனால் இப்போதுவரை அவரது தரப்பில் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் எங்களிடம் சிவசேனா பேசவே இல்லை. ஆனால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உடன் பேச்சுவார்தை நடத்தி வருகிறது. சிவசேனா எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.” எனக் குற்றம்சாட்டினார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் முதன்முதலாக செய்தியாளர்களைச் சந்தித்த உத்தவ் தாக்கரே, “முதன்முறையாக பால் தாக்கரே குடும்பம் பொய் சொல்லி இருப்பதாக பட்னாவிஸ் சொன்னது காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தெரியும் யார் பொய் சொல்கிறார்கள் என்று.

“துரோகம் செய்தது பா.ஜ.கவா? சிவசேனாவா?” - உச்சகட்டத்தில் மகாராஷ்டிர மாநில அதிகார மோதல்!

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் அமித்ஷா துணை முதல்வர் பதவி தருவதாகக் கூறினார். நான் அதை ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டேன். மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனாவை சேர்ந்தவர் வருவார் என்று சத்தியம் செய்தேன். அதிகாரத்தில் சமமான பங்கு வேண்டும் என்று அமித்ஷாவிடன் வலியுறுத்தினேன்” எனக் குறிப்பிட்டார்.

மகாராஷ்டிரா தற்போது ஜனாதிபதி ஆட்சியை சந்திக்கக் காத்திருக்கிறது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால் தங்கள் எம்.‌எல்.‌ஏ-களை பேரம்பேசக் கூடும் என்பதால் 56 எம்‌எல்‌ஏ-களை சொகுசு விடுதியில் சிவசேனா தங்கவைத்து இருக்கிறது. சட்டபேரவையில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதபட்சத்தில் மீண்டும் மகாராஷ்டிரா மாநிலம் தேர்தலைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

- சி.ஜீவ பாரதி

banner

Related Stories

Related Stories