அரசியல்

“தலைப்புச் செய்திகளுக்காக கவர்ச்சிகரமாகப் பேசினால் மட்டும் பொருளாதாரம் மீண்டுவிடாது” - பிரியங்கா சாடல்!

தலைப்புச் செய்திகளுக்காக கவர்ச்சி வார்த்தைகளைப் பேசுவதால் மட்டும் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டுவிடாது என உ.பி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

“தலைப்புச் செய்திகளுக்காக கவர்ச்சிகரமாகப் பேசினால் மட்டும் பொருளாதாரம் மீண்டுவிடாது” - பிரியங்கா சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் படுமோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. அதுமட்டுமல்லாது பன்னாட்டு பெரு நிறுவனங்கள் கூட தங்களின் முதலீடுகளை திரும்பப் பெற்று வருகின்றன. இந்த நிலைமைக்கு ஓலா - உபர் போன்ற நிறுவனங்களே காரணம் என மத்திய நிதியமைச்சர் கூறுகிறார்.

மேலும் 2024-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என பா.ஜ.க அமைச்சர்கள் பேசி வருகின்றனர். தற்போது உள்ள மந்தநிலையை கருத்தில் கொண்டால் 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடைய முடியாது என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை இந்தியாவில் இருந்து திரும்பப் பெறுவதாக வெளியான செய்தியினை சுட்டிக்காட்டியும், 5 ட்ரில்லியன் பொருளாதாரம் குறித்து பா.ஜ.க-வின் வெற்றுப் பேச்சுக்களால் எந்த பலனும் இல்லை என்றும், உத்திரபிரதேச கிழக்கு மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “5 ட்ரில்லியன் பொருளாதாரம் குறித்த வெற்றுப் பேச்சுக்களாலும், தலைப்புச் செய்திகளுக்காக கவர்ச்சி வார்த்தைகளை பேசுவதாலும் மட்டும் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டுவிடாது. அதேபோல், வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தினால் மட்டும் மூலதனங்களை ஈர்க்கமுடியாது.

இந்திய பொருளாதார நிலையால், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்திருக்கிறது. இந்த மந்தநிலை அவர்கள் நம்பிக்கையைச் சிதைத்திருக்கிறது. இந்த உண்மையை பா.ஜ.க அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, உண்மையை ஏற்க மறுக்கிறார்கள். வளர்ந்துவ ந்த இந்தியாவிற்கு இந்த பொருளாதார மந்தநிலை ஒரு வேகத்தடை போல் ஆகிவிட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories