அரசியல்

வீட்டுக்காவலில் சந்திரபாபு நாயுடு ; அராஜக போக்கை கையாளும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ்! - ஆந்திராவில் பதட்டம்!

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆந்திரா முழுவதும் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.

வீட்டுக்காவலில் சந்திரபாபு நாயுடு  ; அராஜக போக்கை கையாளும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ்! - ஆந்திராவில் பதட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆந்திராவை ஆட்சி செய்யும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேச கட்சியினர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக அரசியல் வன்முறை சம்பவங்களை நடத்திவருவதாகவும், இத்தகைய வன்முறை சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர மிகப் பெரிய பேரணி ஒன்றை நடத்த தெலுங்கு தேசம் கட்சி முடிவு எடுத்து அழைப்பு விடுத்தது.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாதபடி போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுக்கப்பட்டதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக தடையை மீறி போராட்டம் நடத்த அனுமதித்திருந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கட்சி தொண்டர்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டங்களினால் ஆந்திரா முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories