அரசியல்

நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பவே சந்திராயன்-2 பெரிதுபடுத்தப் படுகிறது - மம்தா பானர்ஜி

நாட்டில் நிலவும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பவே சந்திராயனை பெரிதுபடுத்தப் படுவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பவே சந்திராயன்-2 பெரிதுபடுத்தப் படுகிறது - மம்தா பானர்ஜி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சியை மறைப்பதற்காகவே சந்திராயன் விண்கலம் முதன்மையாக்கப் படுவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ''சந்திரயான் விண்கலம் இப்போது தான் முதல்முறையாக ஏவப்படுவது போன்ற தோற்றத்தை பா.ஜ.க உருவாக்கி வருகிறது.

பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதுபோன்ற விண்வெளி சார்ந்த சாதனைகள் நாட்டில் நிகழ்ந்ததே இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க பா.ஜ.க அரசு முயற்சி மேற்கொள்கிறது. இது நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பவே செய்யப்படுகிறது.

அரசியல் பழிவாங்குவதை கைவிட்டு பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதையே நானும் கூறுகிறேன். பத்திரிக்கை, நீதித்துறை உள்ளிட்ட ஜனநாயகத்தின் தூண்கள் மத்திய அரசின் ஆலோசனைப்படியே செயல்படுகின்றன.

குடிமக்கள் தேசியப் பதிவேடு என்பது பாஜக ஆட்சியின் பழிவாங்கல் நடவடிக்கையைத் தவிர வேறில்லை. உண்மையான இந்தியர்களின் பெயர்கள் என்.ஆர்.சி பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. ஆகவே இதனை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை'' எனத் தெரிவித்தார்.

மேலும், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க போவதில்லை என கூறியதாக தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories