அரசியல்

“பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை” பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

“பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை” உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

“பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை” பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் அதிகம் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய உத்தர பிரதேச மாநிலத்தின் உன்னாவோ பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, டெல்லியில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது மருமகளே புகார் கொடுத்துள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்வதாக சட்டக்கல்லூரி மாணவி வீடியோ மூலம் புகார் தெரிவித்திருந்தார்.

புகார் தெரிவித்திருந்த மூன்றே நாட்களில் மாணவி திடீரென மாயமானார். இதனையடுத்து சுவாமி சின்மயானந்த் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புகார் தெரிவித்த மாணவி காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மாணவி காணாமல் போனதற்கு சுவாமி சின்மயானந்த்க்கு தொடர்பு இருக்கும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனநாயக அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “உன்னாவ் வழக்கின் மறுபதிப்புதான் சுவாமி சின்மயானந்த் பாலியல் வழக்கு. பா.ஜ.க ஆட்சியில் அவரிகளின் தலைவருக்கு எதிராக ஒரு பெண் புகார் கொடுத்தால், அவளுக்கு நீதி கிடைக்கும் என்பது சாத்தியமில்லை. அவர்கள் பாதுகாப்புக்கும் உத்தரவாதமில்லை.

பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு ஒருநாள் கூட பாதுகாப்பானதாக இருக்க முடியாது. இதே குற்றவாளி (சின்மயானந்த்) மீது கடந்த ஆண்டு ஒரு பாலியல் வழக்கை பா.ஜ.க அரசு திரும்ப பெற்றுள்ளது. இதிலிருந்தே பா.ஜ.க அரசின் நிலைப்பாடு தெரிகிறது’’ என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories