அரசியல்

கடந்தாண்டு 6.7%.. இந்தாண்டு 6.2%.. அடுத்தாண்டு? - இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை குறைத்த மூடிஸ்!

முன்னர் வெளியிட்டிருந்த பொருளாதார வளர்ச்சி கணிப்பில் இருந்து தற்போது குறைந்துள்ளதாக மூடிஸ் நிறுவனம் கூறியுள்ளது.

கடந்தாண்டு 6.7%.. இந்தாண்டு 6.2%.. அடுத்தாண்டு? - இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை குறைத்த மூடிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மூடிஸ் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியிட்டிருந்த பொருளாதார வளர்ச்சி கணிப்பில் இருந்து தற்போது குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் என கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 ஆகக் குறைந்துள்ளது. இந்த குறைவிற்கு தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையே காரணம் என்றும் ஆசிய நாடுகளில் நிகழும் பொருளாதார சூழலும் ஒரு காரணம் என குறிப்பிட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் 2020ம் ஆண்டு வளர்ச்சி விகிதம் 6.7 ஆக மட்டுமே இருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கு முன்னதாக பன்னாட்டு நிதியமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என கணித்திருந்திந்தது. இந்தியாவின் இந்த 6.2 சதவீத வளர்ச்சி என்பதே மிகக் குறைவு.

அதாவது 13 சதவீதத்தில் இருந்து 6.2 சதவீதத்திற்கு வந்துள்ளோம். இந்த வீழ்ச்சி என்பது இந்திய பொருளாதார வரலாற்றில் பேரிழப்பு. ஆனால், இதைப் பற்றி பா.ஜ.க அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories