அரசியல்

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க பிரியங்கா காந்தி மறுப்பு... இடைக்கால தலைவரை நியமிக்க முடிவு?

காங்கிரஸ் செயற்குழுவைக் கூட்டி இடைக்கால தலைவரை நியமிக்க கட்சியின் மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க பிரியங்கா காந்தி மறுப்பு... இடைக்கால தலைவரை நியமிக்க முடிவு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் தோல்வியை சந்தித்ததால் தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார் ராகுல் காந்தி.

அவரது ராஜினாமா முடிவை வாபஸ் பெறக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர், தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் ராகுல் காந்தி தன் முடிவில் இருந்து பின் வாங்காமல் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க பிரியங்கா காந்தி மறுப்பு... இடைக்கால தலைவரை நியமிக்க முடிவு?

இதனையொட்டி, 134 ஆண்டுகள் பழமையான, பாரம்பரியமிக்க கட்சியில் தலைமையில்லாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள சோன்பத்ராவில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறில் கிராமத் தலைவர் யக்தா தத்தின் ஆட்கள் கிராம மக்களை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினர். இதில் 10 பழங்குடியினர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக சோன்பத்ராவுக்கு சென்ற உ.பி கிழக்கு மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் அனுமதிக்காததால் நிகழ்விடத்திலேயே அவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் தேசிய அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளார் பிரியங்கா காந்தி.

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க பிரியங்கா காந்தி மறுப்பு... இடைக்கால தலைவரை நியமிக்க முடிவு?

இதனால், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக பிரியங்கா பொறுப்பேற்கவேண்டும் எனும் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன. மேலும், காந்தி குடும்பத்தினரை தவிர வேறு யார் காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்றாலும், அடுத்த 24 மணிநேரத்தில் கட்சி உடைய நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நட்வர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், தற்போது தான் வகித்து வரும் மாநில பொதுச்செயலாளர் பதவியிலேயே பணியாற்ற விரும்புவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் பிரியங்கா காந்தி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம், காங்கிரஸ் மாநில தலைவர்கள் ஆலோசித்து காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக 7 பேரின் பெயர்களை பரிந்துரைத்து சீலிடப்பட்ட உறையை கட்சியின் செயற்குழுவிடம் அளித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க பிரியங்கா காந்தி மறுப்பு... இடைக்கால தலைவரை நியமிக்க முடிவு?

அந்த பட்டியலில் மல்லிகார்ஜுன கார்கே, சுஷில்குமார் ஷிண்டே, முகுல் வாஸ்நிக், திக்விய் சிங், குமாரி செல்ஜா, சச்சின் பைலட், ஜோதிராதித்யா சிந்தியா ஆகிய ஏழு பேரின் பெயர்கள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராகுல் காந்தியை தலைவர் பதவியில் இருந்து மாற்றுவது குறித்து ஒருமித்த கருத்து ஏற்படவில்லையெனில், அமெரிக்காவில் இருந்து ராகுல் காந்தி திரும்பியதும் செயற்குழுவைக் கூட்டி இடைக்கால காங்கிரஸ் தலைவரை நியமிக்க சோனியா காந்தி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories