அரசியல்

இந்தியாவுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரு விஷப் பூச்சி - நாரயணசாமி நெத்தியடி !

நாட்டைத் துண்டாக்க விஷப் பூச்சியாக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் செயல்படுகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவுக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரு விஷப் பூச்சி - நாரயணசாமி நெத்தியடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 117வது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் அக்கட்சி அலுவலகத்தில் காமராஜரின் உருவப் படத்துக்கு மலர்தூவி காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, அரசியல் தலைவர்களின் பிறந்த நாளுக்காக பேனர் வைப்பதற்கு செலவிடப்படும் தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள் என கூறியவர் காமராஜர். ஆனால், தற்போது பணம் சம்பாதிப்பதற்காகவே சிலர் அரசியலுக்கு வருகின்றனர் என சாடினார்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று 17 மாநில காங்கிரஸ் தலைவர்கள்தான் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார் என பேசிய நாராயணசாமி, நாட்டில் உள்ள மக்களை மதத்தின் பேரின் துண்டாக பிரிக்க இருக்கும் ஆர்.எஸ்.எஸ். ஒரு விஷப்பூச்சி என சாடியுள்ளார். சிறுபான்மையினர்களை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்று பாஜக.,வும் ஆர்.எஸ்.எஸ்ஸும் துடித்துக்கொண்டிருக்கிறது என்றார்.

banner

Related Stories

Related Stories