அரசியல்

ஏப்பா..பச்சை சட்ட, டோக்கன் போட்டு பா.ஜ.க.,ல சேந்துக்க: வடிவேலுவை நினைவுபடுத்திய SVe சேகர்

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தை புறக்கணித்து மந்தைவெளியில் தனியாக எஸ்.வி.சேகர் நடத்திய உறுப்பினர் சேர்க்கை வைரலாகி உள்ளது.

ஏப்பா..பச்சை சட்ட, டோக்கன் போட்டு பா.ஜ.க.,ல சேந்துக்க: வடிவேலுவை நினைவுபடுத்திய SVe சேகர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் பா.ஜ.க. தலைமைப் பதவிக்கு யாருக்கு என்பதில் எஸ்.வி.சேகருக்கும், தமிழிசை சவுந்திரராஜனுக்கும் போட்டா போட்டியே நிலவி வருகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழிசையை வம்புக்கு இழுத்து வருகிறார் எஸ்.வி சேகர்.

இதற்கிடையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட 5 தொகுதிகளும் படு தோல்வியை தழுவியது. ஆதலால், தமிழக பா.ஜ.க. தலைமைதான் தோல்விக்கு காரணம் என தமிழிசையை சாட ஆரம்பித்தார் எஸ்.வி.சேகர்.

பின்னர் அவ்வப்போது தமிழக தலைமை மாற்றப்படும் என்றும் அதற்கு சரியான ஆள் நியமிக்கப்படுவார் பேட்டி அளித்து வந்த பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி.சேகர், அண்மையில் இன்னும் ஓரிரண்டு மாதங்களில் நிச்சயம் தமிழக பா.ஜ.க தலைமை மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், பா.ஜ.க.,வில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற ஆட்சேர்ப்பு முகாமை புறக்கணித்துவிட்டு மந்தைவெளியில் தனியாக சேரை போட்டு ஆட்சேர்ப்பு முகாமை நடத்தியுள்ளார் எஸ்.வி.சேகர்.

சினிமா காமெடி ஒன்றில் டீக்கடை முன் நின்று வந்தவர், போனவர்களை பிடித்து வடிவேலு வாகன டோக்கன் போடச்சொல்வது போல உறுப்பினர் சேர்க்கை முகாமை எஸ்.வி.சேகர் நடத்தியிருப்பது சமூக வலைத்தளங்களில் கிண்டல் கேலிக்குரிய பேசு பொருளாகி இருக்கிறது.

banner

Related Stories

Related Stories