அரசியல்

இந்தி திணிப்பில் பா.ஜ.க.,வுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று காட்டுகிறது அ.தி.மு.க : கனிமொழி 

புதிதாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் தமிழ் மொழியில் குறிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. இதன்முலம் அ.தி.மு.க இந்தியை திணிக்கிறது என எம்.பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தி திணிப்பில் பா.ஜ.க.,வுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று காட்டுகிறது அ.தி.மு.க :  கனிமொழி 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக அரசு சார்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்துகளில் இந்தி மற்றும் ஆங்கில எழுத்தில் மட்டும் எழுத்துக்கள் உள்ளது. தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் தமிழ் மொழி இல்லை என மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் 500 புதிய அரசு பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்து கழகம் உள்ளிட்ட கோட்டங்களுக்கு இந்த புதிய அரசுப் பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தி திணிப்பில் பா.ஜ.க.,வுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று காட்டுகிறது அ.தி.மு.க :  கனிமொழி 

இந்த புதிய பேருந்துகளில் உள்ள அவசர வழி உள்ளிட்ட சில குறிப்புகள் இருக்கும் இடத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன. தமிழ் மொழி ஒரு இடங்களில் கூட இடம்பெறவில்லை. இந்த செய்திகள் வெளிவந்த பிறகு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகினறார். மோடி அரசின் பினாமியாக அதிமுக செயப்படுகிறது என கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றார்கள்.

இதனிடையே இதற்கு தி.மு.க எம்.பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை. மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால் நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்". என அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories