அரசியல்

“வைகோவை இந்த தண்டனை பாதிக்காது; அவர் வெற்றி பெறுவார்” - ஈஸ்வரன் பேட்டி

தேச துரோக வழக்கில் தண்டனை என வைகோவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது அவரை பாதிக்காது என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் பேசியுள்ளார்.

“வைகோவை இந்த தண்டனை பாதிக்காது; அவர் வெற்றி பெறுவார்” - ஈஸ்வரன் பேட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1972-ம் ஆண்டு மின்சார கட்டன உயர்வைக் கண்டித்து அய்யம்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் நினைவஞ்சலி கூட்டம் திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்றது. இதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்றிருந்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைகோவுக்கு அளிக்கப்பட்ட இந்த தண்டனை அவரை பாதிக்காது. மேல்முறையீடு செய்து அவர் வென்றுவிடுவார் எனப் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க, கிடப்பில் போடப்பட்டிருக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலே போதும் என்றார். மேலும், உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகளின் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தாமல் இருக்கவேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார்.

இதுவே மின்மிகை மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு சிறந்த எடுத்துகாட்டாக உள்ளது எனவும் கிண்டலாகத் தெரிவித்துள்ளார் ஈஸ்வரன்.

banner

Related Stories

Related Stories