அரசியல்

காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதில் மாற்றம் இல்லை - ராகுல்காந்தி திட்டவட்டம்!

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதில் மாற்றம் இல்லை - ராகுல்காந்தி திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார்.

இதையடுத்து, முக்கிய தலைவர்கள் ராகுல் காந்தியை சந்தித்து அவர் தலைவர் பதவியில் தொடரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதேபோல் காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தி தலைவர் பதவியில் தொடர வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.

ஆனால், அவர் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜினாமா குறித்து ராகுல் காந்தி, ‘நான் ஏற்கனவே கட்சி தலைமையிடம் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டேன். நான் காங்கிரஸ் தலைவர் இல்லை. காங்கிரஸ் செயற்குழுவை உடனடியாக கூட்டி புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக இருக்கும் ராகுல் காந்தி, நாடு முழுவதும் பயணித்து, காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடவிருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

banner

Related Stories

Related Stories