அரசியல்

ராகுலை தவிர வேறு யார் தலைவரானாலும் மக்களை ஈர்க்க முடியாது : திருநாவுக்கரசர் கருத்து

காங்கிரஸின் வெற்றிக்காக ஒத்துழைக்காதவர்களை ஒதுக்கும் உரிமை ராகுல் காந்திக்கு உள்ளது. அவர் ஒதுங்கவேண்டிய அவசியம் இல்லை என்று கருத்து முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ராகுலை தவிர வேறு யார் தலைவரானாலும் மக்களை ஈர்க்க முடியாது : திருநாவுக்கரசர் கருத்து
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸின் தலைவராக ராகுல் காந்தியே நீடிக்கவேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது.

காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும் ராகுல் காந்திக்கு மட்டுமே மக்களை ஈர்க்கக் கூடிய ஆற்றல் உள்ளது என்று திருச்சி மக்களவை எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தியின் முடிவை மாற்றிக்கொள்ளவும், தலைவர் பதவியில் நீடிக்க அவரிடம் வலியுறுத்துவேன் என்றும் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பாளியாக முடியாது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

காங்கிரஸின் வெற்றிக்காக ஒத்துழைக்காதவர்களை ஒதுக்கும் உரிமை ராகுல் காந்திக்கு உள்ளது. அவர் ஒதுங்கவேண்டிய அவசியம் இல்லை என்று கருத்து தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மேகதாது அணை கட்டப்படும் என ராகுல் காந்தி பேசியதாக முதலமைச்சர் பழனிசாமி கூறுவது தவறு. அதற்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால் காட்டவேண்டும் எனவும், நாட்டின் பழமையாக கட்சியான காங்கிரஸின் உறுப்பினர்களை வெளியேற்ற செய்வதோ, வெளிநடப்பு செய்ய வைப்பதோ கண்டனத்திற்குரியது என்றும் கூறினார்.

banner

Related Stories

Related Stories