அரசியல்

தேர்தல் செலவுக்கு ரூ.28,000 கோடி எங்கிருந்து வந்தது? - பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கேள்வி!

மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க. மட்டும் ரூ.28,000 கோடி செலவிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

தேர்தல் செலவுக்கு ரூ.28,000 கோடி எங்கிருந்து வந்தது? - பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2019 நாடாளுமன்றத் தேர்தலில், நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் செய்த செலவு ரூ.60,000 கோடி ஆகும். இதுவே, உலகில் அதிக அளவில் செலவிடப்பட்ட தேர்தல் என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் செலவு குறித்து அண்மையில் சி.எம்.எஸ். என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இவை அனைத்தும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க. மட்டும் 28,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது என்று காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து வந்தது என்று பா.ஜ.க தெரிவிக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தலுக்காக பா.ஜ.க செலவிட்ட தொகை, நாட்டில் கல்விக்காக செலவிடக்கூடியதில் மூன்றில் ஒரு பங்கு எனவும் அபிஷேக் மனுசிங்வி குறிப்பிட்டார்.

அதேப்போல், சுகாதார பட்ஜெட்டில் 43 சதவிகிதமும், பாதுகாப்புத்துறைகான பட்ஜெட்டில் 10 சதவிகிதமும் தான் பா.ஜ.கவின் தேர்தல் செலவு என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories