அரசியல்

வயநாடு தொகுதியில் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார் !

கேரளாவின் வயநாடு தொகுதியில் வாக்காளர்களுக்கு வாகனத்தில் சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார்.

வயநாடு தொகுதியில் வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சத்து 31 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார். மேலும் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற வைத்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்க மூன்று நாள் பயணமாக கேரளா வந்துள்ளார். மேலும் மூன்று நாட்களில் 15 பொது நிகழ்சிகளில் பங்கேற்க உள்ளார்.

டில்லியில் இருந்து இன்று பகல் 2 மணிக்கு புறப்பட்ட ராகுல், ஹரிப்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கினார். காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து 3 மணிக்கு திருவல்லி பகுதியில் காங்கிரசார் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

முதல் நாளான இன்று அங்கு திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிலம்பூர், எறநாடு, ஹரிக்கோட் ஆகிய பகுதிகளில் நடைபெறும் பேரணிகளில் ராகுல் காந்தி கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதில், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ராகுலுடன் கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களும் உடன் சென்றனர்.

banner

Related Stories

Related Stories